Loading...
Tuesday, 12 April 2016

சுவையான கேரட் பொரியல் செய்யலாம் வாங்க...!!

"கேரட் பொரியல் செய்யும் முறை

தேவையான பொருள்கள் :

கேரட் - கால் கிலோ
உப்பு - அரை தேக்கரண்டி

தாளிக்க:
   
எண்ணெய் - இரண்டு தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - இரண்டு
உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி
வெங்காயம் - அரை பாகம்
கறிவேப்பிலை - சிறிது
பச்சை மிளகாய் - ஒன்று
கொத்தமல்லி தழை - சிறிது
தேங்காய் துருவல் - மூன்று மேசைக்கரண்டி

செய்முறை :

முதலில் கடலைப்பருப்பை ஊற வைக்கவும்.
   
கேரட்டை பொடியாக நறுக்கி அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக விடவும்.தேவையான உப்பு சேர்த்து கலந்துவிட்டு மூடிபோட்டு வேகவிடவும். வெந்ததும் அதிலேயே தண்ணீரை சுண்ட விட்டு இறக்கவும். தண்ணீரை வடித்தால் அதில் உள்ள சத்து போய் விடும்.
   
ஒரு வாணலியை காய வைத்து அதில் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, ஊறிய கடலை பருப்பு போட்டு தாளித்து அரை வெங்காயத்தை பொடியாக அரிந்து போட்டு கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
   
பிறகு வேக வைத்துள்ள கேரட், பச்சை மிளகாய் பொடியாக நறுக்கி போட்டு, தேங்காய் துருவலும் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
   
சுவையானா கேரட் பொரியல் ரெடி.

0 கருத்துகள்:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...

 
TOP