Loading...
Tuesday, 8 March 2016

சுவையான மீன் கட்லெட்...


தேவையான பொருட்கள்:

 

மீன் - 1/2 கிலோ

உருளைக்கிழங்கு - 2

சின்ன வெங்காயம் - 100 கிராம்

பச்சைமிளகாய் - 5

சீரகத்தூள் - 1/2 ஸ்பூன்

மிளகுத்தூள் - 1/2 ஸ்பூன்

மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்

இஞ்சி, பூண்டு விழுது - 1/4 ஸ்பூன்

கொத்தமல்லி இலை - 1 கொத்து

புதினா இலை - 1 கொத்து

ரஸ்க் தூள் அல்லது ரொட்டி தூள் - தேவைக்கேற்ப

முட்டை - 4 

எலுமிச்சை சாறு - 1/2 ஸ்பூன் 

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

 

செய்முறை:

 

* மீன், உருளைக்கிழங்கு இரண்டையும் ஆவியில் வேகவைத்து மசித்துக் கொள்ளவும்.

* வெங்காயம், தக்காளி, ப.மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, புதினா, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

 

* வாணலியில் சிறிது எண்ணெயை விட்டு வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு விழுது, கொத்தமல்லி, புதினா ஆகியவற்றை வதக்கி ஆவியில் வேகவைத்து மசித்த மீனை கலவையில் சேர்த்து நன்றாக வதக்கவும். 

* அத்துடன் மிளகாய்த்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.

 

* ஒரு வா‌ய் அக‌‌ன்ற பா‌த்‌திர‌த்‌தி‌ல் மு‌ட்டையை (வெள்ளைக்கரு மட்டும்) உடை‌த்து ஊ‌ற்‌றி ந‌ன்கு அடி‌த்து வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

* ரஸ்க் தூளை ஒரு தட்டில் கொட்டி வைக்கவும்.

* மீன் மசாலாவை சிறிது எடுத்து வேண்டிய வடிவில் உருட்டி முட்டையில் முக்கி பின் ரஸ்க் தூளில் பிரட்டி வைக்கவும்.

* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் உருட்டி வைத்துள்ள மீனை போட்டு சுற்றி எண்ணெய் விட்டு வெந்தபின் திருப்பி போட்டு எடுக்கவும்.

* சுவையான மீன் கட்லெட் ரெடி.

* குழந்தைகளுக்கு இது மிகவும் பிடிக்கும். மீன் பிடிக்காதவர்களுக்கு இப்படி செய்து கொடுத்தால் பிடிக்கும். அதிக முள் இல்லாத மீனாக தேர்வு செய்யவும். வஞ்சிரம் போன்ற மீன்களை தேர்வு செய்யலாம்.

0 கருத்துகள்:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...

 
TOP