என்னென்ன தேவை?
1 லிட்டர் சுத்த பசும் பாலில் இருந்து எடுத்த பனீர் - 200 கிராம்,
தண்ணீர் - 5 கப்,
சர்க்கரை - 5 கப்,
ஏலக்காய் - சிறிது.
எப்படிச் செய்வது?
ஒரு குக்கரில் 4 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். இத்துடன் 3 கப் சர்க்கரையை கரைக்கவும்.
சர்க்கரை, தண்ணீர் கொதித்துக் கொண்டு இருக்கும் சமயத்தில் பனீரை ஒரு தட்டில் கொட்டி மெதுவாக தட்டில் ஒட்டாமல் வரும் வரை தேய்க்கவும்.
இப்போது தேய்த்த பனீரை சிறு சிறு உருண்டைகளாக வெடிப்பு இல்லாமல் உருட்டி மெதுவாக (அழுத்தாமல்) குக்கரில் கொதிக்கும் சர்க்கரை தண்ணீரில் போடவும்.
மிதமான தீயில் இப்படி எல்லா வற்றையும் சேர்த்து குக்கரை மூடவும். ஒரு விசில் வந்ததும் இறக்கி விடவும்.
குக்கர் ஆறும் வரை வைத்திருக்கவும். வேறு ஒரு அடிகனமான பாத்திரத்தில் 1 கப் தண்ணீர், 2 கப் சர்க்கரை சேர்த்து பிசுபிசுப்பாக பாகு வரும் வரை கொதிக்க விடவும்.
பாகு வந்ததும் இறக்கி ஏலக்காய் விதை சேர்த்து ஆறிய குக்கரில் உள்ள ரசகுல்லாவை மெதுவாக உடையாமல் சல்லி கரண்டி கொண்டு எடுத்து பாகில் போடவும். 6 மணி நேரம் ஊறிய பின் எடுத்துப் பரிமாறவும்...
0 கருத்துகள்:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...