இருமலுடன் ஜுரம், நெஞ்சுவலி, தலைவலி, மயக்கம் போன்றவை இருந்தால் உடனடி மருத்துவ சிகிச்சை தேவை என்பதனை அறிய வேண்டும்.
இருமல் சர்வ சாதாரணமாக அன்றாடம் பலரிடையே நாம் காணும் ஒன்று. ஒரு வீட்டில் நான்கு பேர் இருந்தால் அநேகமாக ஒருவர் ஏதோ ஒரு சிறிய பாதிப்பினாலோ அல்லது பெரிய பாதிப்பினாலோ இருமிக் கொண்டேதான் இருப்பார். தொண்டையில் ஒரு கனைப்பு சத்தம், அல்லது சத்தமான இருமல் இவை அனைத்துமே தொண்டை சளி அல்லது ஏதோ ஒரு தொண்டை தொந்தரவினை நீக்க முயற்சிக்கும் விளைவு. இதற்கு பல வகையான அடிப்படை காரணங்கள் உண்டு.
சில வகை இருமல் 3 வாரம் வரை நீடிக்கும். சில வகை மூன்று முதல் எட்டு வாரம் வரை நீடிக்கும். எட்டு வாரத்திற்கும் மேலாக சில வகை நீடிக்கும். பொதுவில் இரண்டு வாரத்திற்குள் இருமல் பாதிப்பில் அநேகருக்கு முன்னேற்றம் தெரியும். நான்கு வாரம் ஆகியும் முன்னேற்றம் இல்லை என்றாலும் இருமலில் ரத்த கசிவு, வெளியேற்றம் இருந்தாலோ மருத்துவ உதவி மிக அவசியம் என்று அறிக. இருமல் தொண்டையை சுத்தம் செய்யும் காற்று குழாய்கள் சளியாலோ, புகை தூசு இவற்றாலோ அடைபட்டால் இருமல் அதனை வெளிக் கொணர்ந்து விடும்.
ப்ளூ, ஜலதோஷம் போன்றவை வைரஸ் மற்றும் கிருமி பாதிப்புகளால் ஏற்படும் இருமல், மருந்துகளின் உதவியால் நீங்கும். புகை பிடிப்பவர்களுக்கு ஏற்படும் இருமல் நீங்காது இருப்பது, அவர்களது நுரையீரலையே புகை மண்டல தாக்குதலுக்குள்ளாக்கி விடும். ஒரு வித்தியாசமான சத்தம் இருக்கும்.
அநேக சிறு குழந்தைகளுக்கு ஆஸ்துமா எனப்படும் அலர்ஜி பாதிப்பினால் இருமல் இருக்கக் கூடும். இவர்களுக்கு சிறிய சிகிச்சை முதல் பெரிய சிகிச்சை வரை தேவைப்படலாம். அநேகருக்கு அவர்கள் வளர வளர இது நீங்கும். சில வகை மருந்துகள் கூட இருமலை ஏற்படுத்தும்.
* தொண்டை பாதிப்பு
* மூக்கில் கசிவு
* நிமோனியா
* இருதய பாதிப்பு
* அதிக அசிடிடி
போன்ற காரணங்களாலும் இருமல் பாதிப்பு ஏற்படக்கூடும். இருமலுடன் ஜுரம், நெஞ்சுவலி, தலைவலி, மயக்கம் போன்றவை இருந்தால் உடனடி மருத்துவ சிகிச்சை தேவை என்பதனை அறிய வேண்டும். பொதுவில் வைரஸ் மூலம் ஏற்படும் பாதிப்பில் ஆன்டி பயாடிக் மூலம் பயன்பெற முடியாது. ஆனால் சில கவன முறைகளை மேற்கொள்ளலாம்.
* உடலில் நீர்சத்து குறையாதிருக்க நன்கு தண்ணீர் குடிக்க வேண்டும்.
* தூங்கும் பொழுது தலையினை சற்று உயர்த்தி வைத்துக் கொள்ளலாம்.
* சில இருமல் மருந்துகள் கொண்டு தற்காலிக நிவாரணம் பெறலாம்.
* உப்பு கலந்த சுடுநீர் கொண்டு தொண்டையில் கொப்பளிக்கலாம்.
* தூசு, புகை இவற்றினை தவிர்த்து சுத்தமான இடத்தில் இருக்கலாம்.
* அடிக்கடி சிறிது தேன் எடுத்துக் கொள்ளலாம்.
* இஞ்சி சாறு, இஞ்சி டீ எடுத்துக் கொள்ளலாம்.
* மூக்கடைப்பிற்கான ‘இன் ஹேலர்’ உபயோகிக்கலாம்.
கிருமி பாதிப்பினால் ஏற்படும் பாதிப்பிற்கு மருந்து அவசியம். எக்ஸ்ரே, ரத்த பரிசோதனை, சளி பரிசோதனை என சில மருத்துவ பரிசோதனைகள் தேவைப்படுவதும் உண்டு. சில சமயங்கள் சிடி ஸ்கேன் போன்ற பரிசோதனைகளும் தேவைப்படுவதுண்டு. இவை அனைத்தும் பாதிப்பின் தீவிரத்தினைப் பொறுத்தே அமையும். இருமலை கவனிக்காது விட்டு விட்டால்
* சோர்வு
* மயக்கம்
* தலைவலி
* மார்பு எலும்பு முறிவு
போன்றவை கூட ஏற்பட வாய்ப்புண்டு.
புகை பிடிப்போர் புகை பிடிப்பதனை விட்டு விட்டால் நிரந்தர இருமல் என்ற பாதிப்பு இருக்காது. பழங்கள், நார்சத்து போன்றவைகள் இருமலுக்கு மிக பெரிய எதிர்ப்பு சக்தி ஆகும். கைகளை நன்கு சோப் கொண்டு கழுவுவது எத்தகைய நன்மையினை பயக்கும் என்பதனை மீண்டும் மீண்டும் நினைவில் கொண்டு செயல்படுத்த வேண்டும். இருமலுக்கான கீழ் கண்ட காரணங்களையும் நீங்கள் தெரிந்து கொண்டால் உங்களையும், உங்களைச் சுற்றி உள்ளவர்களையும் நீங்கள் காத்துக் கொள்ள முடியும்.
* ஆஸ்த்மா
* அலர்ஜி
* சாதா சளி
* டிபி
* ப்ளூ
* சைனஸ் தொல்லை
* நுரையீரல் பாதிப்பு
* இருதய பாதிப்பு
* அசிடிடி
* டான்ஸில்ஸ் வீக்கம்
* ஹீக் வார்ம் தொல்லை
* நிமோனியா
* நுரையீரல் புற்று நோய்
* நுரையீரல் தடிப்பு
* ஸ்டாப் பாக்டீரியா
* பேச்சு குழாய் வீக்கம்
* ஸ்வைன்ப்ளூ
* கக்குவான் இருமல்
* அயோட்டா ரத்த குழாய் பிரச்சினை
* கிருமிகள் தாக்குதல்
* மூச்சு குழாய் அடைப்பு
* மாரடைப்பு
* தீக்காயம்
* நுரையீரலில்நீர்
* அம்மை நோய்
* மூளை காய்ச்சல்
* இருதய வால்வு குறுகுதல்
* மலையேறுதல் போன்று அதிக உயரத்திற்கு செல்லுதல்
* ப்ளேக் நோய் பாதிப்பு (சுகாதாரமின்மையால் ஏற்படுவது)
* பறவைக் காய்ச்சல்
* தைராய்டு கட்டி
* உணவுக்குழாய் வீக்கம்
* உயர் ரத்த அழுத்தம்
* தொண்டை புற்று நோய்
இவைகளும் உங்களுக்கு இருமலை உண்டாக்கலாம் என்பதனை தெரிந்து கொள்ள வேண்டும். நீண்ட நாளாக உள்ள இருமல் வார, மாத கணக்கில் மருத்துவ உதவியுடன் குணமாகும். இருமல் மருந்துகள் சற்று அல்லது அதிக தூக்கத்தினைத் தரலாம்.
இருதய நோய், உயர் ரத்த அழுத்தம், க்ளோகோமா, ப்ராஸ்டேட் பிரச்சனை உடையோர் இருமல் மருந்து எடுத்துக் கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனை அவசியம் பெற வேண்டும்.
* வயதானவர்களுக்கு இருமல் மருந்து கொடுக்கும் பொழுது கவனம் தேவை.
* பிறரது மருந்து சீட்டினை கொண்டு உங்களுக்கோ அல்லது மற்றவருக்கோ மருந்து வாங்கி சிக்கன நடவடிக்கை செய்கிறேன் என்ற பெயரில் ஆபத்தினை வலிய வரவழைத்துக் கொள்ளாதீர்கள்.
தெரிந்து கொள்ளுங்கள்
* பொதுவில் ப்ளூ கோல்ட் இவற்றால் ஏற்படும் இருமல் சிறு கவனிப்பில் தீர்வு பெறும்.
* இருமல் இருந்தால் நன்கு நீர் குடியுங்கள். இது தொண்டையை இதமாக்கும். சளியை இளக்கி வெளியேற்றும்.
* ஒரு வாரத்திற்கு மேல் இருந்தால் தேன் கொடுங்கள்.
* சளி வெளி வரும் இருமல் இருந்தால் அதற்கான இருமல் மருந்து, சளியினை நன்கு வெளியேற்றும்.
* புகை, தூசு இவற்றால் ஏற்படும் இருமலுக்கு அதற்கென்ற இருமல் மருந்து நன்கு அமைதி படுத்தும்.
* ஆன்டிபயாடிக் இருமலை நிறுத்தாது. ஆனால் கிருமியினை நீக்கும்.
* புகை பிடிப்பவர்களுக்கு இருமல் என்றால் அதிகம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
* குழந்தைகளுக்கு அதிக ஓய்வு சிறந்தது.
* சிறுவர்களுக்கு இருக்கும் பெட்குசியா எனும் இடைவிடா இருமல் எளிதில் மற்ற குழந்தைகளுக்கு பரவக்கூடியது. இதில் இருமல் பல வாரங்கள் இருக்கும்.
* ஸ்வைன் ப்ளூ என்பது பன்றிகளிடமிருந்து மனிதனுக்கு பரவக் கூடியது.
* பாதிக்கப்பட்ட பறவைகளுடன் (கோழி) இருப்பவர்களுக்கு பறவைக் காய்ச்சல் ஏற்படுகின்றது.
* நிமோனியா எந்த வயதிலும் ஏற்படலாம் என்றாலும் சிறுவர்களை அதிகம் பாதிக்கக் கூடியது.
* 1 கப் கொதிக்கும் நீரில் இருமல் கட்டுப்பட ஒரு சிறு டீஸ்பூன் மஞ்சள் + மிளகு + பட்டை சிறிதளவு சேர்த்து 2&3 நிமிடங்கள் கொதிக்க வைத்து அனைத்து விடுங்கள். 10 நிமிடங்கள் சென்று இதனை வடிகட்டி ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து அருந்துங்கள்.
* இஞ்சிசாறு + சுடுநீர் + தேன் கலந்து எடுத்துக் கொள்ளுங்கள்.
* வெது வெதுப்பான பாலில் தேன் கலந்து குடியுங்கள்.
* காரட் ஜூஸ் + தேன் கலந்து பருகுங்கள்.
* கிரேப் ஜூஸ் + தேன் கலந்து பருகுங்கள்.
0 கருத்துகள்:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.