கணவனுக்காக என்று தொடங்கி, கரு, குழந்தை வளர்ப்பு, தாய் உள்ளம் என தனது கடைசி நாள் வரை ஏதேனும் ஓர் உணர்ச்சியின் காரணமாக தனது உறக்கத்தை தனது உறவுகளுக்காக தியாகம் செய்கிறாள் மனைவி, தாய் எனும் கதாப்பாத்திரம் ஏற்கும் பெண்.
திருமணமாகி மூன்று நாட்களாக இருந்தாலும் சரி, முப்பது வருடங்கள் ஆனாலும் சரி, கணவன் தாமதமாக வீட்டிற்கு வரும் நேரத்தில் மனைவி தனது தூக்கத்தை தொலைத்துவிடுகிறாள்.
கர்ப்பமாக இருக்கும் ஆறு, ஏழாவது மாதத்தை கடக்கும் போது கண்டிப்பாக ஓர் பெண் தனது தூக்கத்தை தொலைக்க ஆரம்பிப்பாள்.
குழந்தை பிறந்து அது வளரும் போது ஆண்களை விட பெண் தான் அதிகம் தூக்கத்தை தொலைக்கிறாள். பசிக்காக அழுகும் போதும், உடல்நல கோளாறுகளினால் அழுகும் போதும், சமாதானப்படுத்தி உறங்க வைப்பதற்குள் இவளது தூக்கம் காணாமல் போய்விடும்.
பெரும்பாலும் பிள்ளை வெளியே சென்று இரவு சாப்பாட்டிற்கு வீடு திரும்பவில்லை எனில், அவன் சாப்பிட்டானோ இல்லையோ என்ற ஏக்கமே தாயின் உறக்கத்தை காணாமல் போக செய்துவிடுகிறது.
வீட்டில் யாருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனாலும், அவர்களை விட அதிகமாக உறக்கத்தை தொலைப்பவள் பெண் தான் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை.
தான் நினைத்தது தன் கணவன் அல்லது பிள்ளைகளின் மூலம் நடக்காமல் போகும் போது அந்த பெண் மன அழுத்தத்தின் காரணமாக தனது தூக்கத்தை தொலைக்கிறாள். தன் விருப்பத்தை கணவனோ, பிள்ளைகளோ அதை ஏற்க மறுக்கும் போது பெண் அதிக மனஉளைச்சலுக்கு தள்ளப்படுகிறாள்.
0 கருத்துகள்:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...