Loading...
Monday, 3 April 2017

குழந்தைகளுக்கு வாங்கித்தரக் கூடாத விளையாட்டு பொருட்கள்

குழந்தையின் புத்திக்கூர்மை, இணைந்து செயல்படும் இயல்பு, அவற்றைப் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற பொறுப்புணர்வு என்று பலவகைகளிலும் குழந்தையின் வளர்ச்சிக்குத் துணைபுரிபவை விளையாட்டுப் பொருட்கள்.

அந்தக் காலத்தில், செப்பு சாமான், மரப்பாச்சி பொம்மை, பல்லாங்குழி, தாயக்கட்டை போன்ற விளையாட்டுப் பொருட்கள் தரத்திலும் பயன்பாட்டிலும் சிறந்ததாக இருந்தது.

ஆனால், இன்றைய குழந்தைகளுக்கு வாங்கித்தரும் விளையாட்டுப் பொருட்களில் காரீயம் உள்ளிட்ட ரசாயனங்கள் ஒளிந்திருக்கிறது. எனவே, குழந்தைகளுக்கு டாய்ஸ் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை, தவிர்க்க வேண்டியவை பற்றி தெரிந்திருக்க வேண்டியது ஒவ்வொரு பெற்றோருக்கும் அவசியம்.

சீன ப்ளாஸ்டிக் பொம்மைகள், ஃபர், செயற்கை நாரிழை கேசம் கொண்ட பொம்மைகள், பெயின்ட், தரம் குறைந்த கலர் க்ரயான்ஸ், சிலிக்கான் கொண்டு தயாரிக்கப்பட்ட பொருட்கள், விலை குறைந்த, தரமற்ற பொம்மைகளில் பாலிவினைல் க்ளோரைட் (polyvinyl chloride (PVC)) உள்ளிட்ட மோசமான ரசாயனங்கள் கலந்திருக்கும்.

அவற்றை, குழந்தை வாயில் வைத்தால், வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள், வாந்தி, வயிற்று வலி, வயிற்றுபோக்கு, நுரையீரல் பாதிப்பு, அலர்ஜி போன்றவை ஏற்படலாம்.

கூர்மையான முனைகள் கொண்ட பொம்மை, சிறு பொம்மைகள், சின்னச்சின்ன பாகங்கள் கொண்ட விளையாட்டுப் பொருட்கள் ஆபத்தானவை. ஏனெனில் குழந்தைகள் அவற்றை விழுங்கி விடலாம்.

மூன்று முதல் ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பவுன்ஸர் (ரப்பர்) பந்தை வாங்கிக்கொடுத்தால் அதை பிடிக்கப்போய் விழவோ, சுவரில் மோதிக்கொள்ளவோ நேரிடும் என்பதால் அதிகம் மேலெழும்பாத சாஃப்ட் பந்து வாங்கிக்கொடுப்பது பாதுகாப்பானது.

குழந்தைகள் பேட்டரியை நக்குவது, கடிப்பது, வாயில் போட்டுக்கொள்வது போன்ற செயல்களைச் செய்யும்போது அதில் உள்ள கரிப்பொருள் அவர்கள் வயிற்றுக்குள் சென்றால் விஷமாகிவிடும். எனவே, பேட்டரியில் இயங்கும் பொருட்களை தவிர்க்க வேண்டும்.

ஸ்டடி டேபிள், பேபி சேர் என அவர்களுக்கான பொருட்கள் ஃபேன்ஸியாக இருப்பதைவிட, உறுதியானதாக இருக்கட்டும்.

விளையாட்டுப் பொருளின் பேக்கிங்கில் குறிப்பிடப்பட்டிருக்கும் எச்சரிக்கைகளை கவனமாகப் படித்து, வயதுக்கு ஏற்ற பொம்மைகளை தேர்ந்தெடுக்கலாம்.

எடை இல்லாத விளையாட்டுப் பொருட்கள், முனை மழுங்கலான பொருட்கள், மரத்தாலான பொம்மைகள், இயற்கை சார்ந்த பொருட்கள் என குழந்தைகளுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படுத்தாத பொருட்களாக வாங்கிக்கொடுக்கவும்.

“இரண்டு விஷயங்களை முன்னிறுத்தி உங்கள் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்களைத் தேர்ந்தெடுங்கள். மற்ற குழந்தைகளுடன் இணைந்து விளையாடும் இருநபர் அல்லது குழு விளையாட்டாக அது இருக்க வேண்டும். அடுத்ததாக, தாயம், பல்லாங்குழி, பசில்ஸ், கிராஃப்ட், சின்னச் சின்ன அறிவியல் செய்முறைகள் என மூளைக்கு வேலை கொடுக்கும், கற்பனைத் திறனைத் தூண்டும் விளையாட்டாக இருப்பது சிறப்பு.

வீட்டில் ஆண், பெண் என இரண்டு குழந்தைகள் இருந்தால், பெண் குழந்தைக்கு கிச்சன் செட், ஆண் குழந்தைக்கு துப்பாக்கி என்று நீங்களாகவே அவர்களுக்கான விளையாட்டுப் பொருட்களை தீர்மானிக்காதீர்கள். அவர்களுக்கு எது விருப்பம் என்பதைக் கேட்டு வாங்கிக் கொடுங்கள். விளையாட்டுப் பொருட்களை வாங்கித் தருவதை விட முக்கியமானது, பெற்றோரும் அவர்களுடன் அமர்ந்து விளையாடுவது, விளையாட கற்றுக்கொடுப்பது, கதை சொல்வது! அதை தவறாமல் செய்யுங்கள்”

0 கருத்துகள்:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...

 
TOP