Loading...
Friday, 7 April 2017

இருசக்கர வாகனங்களில் பெட்ரோல் டேங்கில் பாதியளவு, பெட்ரோல் நிரப்பினால் போதும்

இரு சக்கர வாகனங்களில், தீ விபத்து ஏற்படுவதை தவிர்க்க, எண்ணெய் நிறுவனங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன.

கார், மோட்டார் பைக் உள்ளிட்ட வாகனங்களில் தீ விபத்து ஏற்படுவது, சமீப நாட்களாக அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, இருசக்கர வாகனங்களில் பெட்ரோல் டேங்க் வெடித்து, விபத்தும், அதனால் உயிரிழப்பும் நேரிடுகிறது.

இந்தியன் ஆயில் நிறுவனத்தினர், பெட்ரோல் பங்க்குகளில், விழிப்புணர்வு நோட்டீஸ் ஒட்டி வைத்துள்ளனர்.

அதில், 'வானிலையில் நிலவும், அதிக வெப்பத்தால், வாகனங்களில் பெட்ரோல் டேங்க் வெடிக்கக் கூடிய அபாயம் உள்ளது. பெட்ரோல் டேங்குகளை முழுவதுமாக நிரப்பும் போது, அதனுள், காற்று சுழற்சிக்கு இடமில்லாமல், பெட்ரோல் சூடாகி வெடிக்கும் அபாயம் ஏற்படுகிறது.

எனவே, பெட்ரோல் டேங்கில் பாதியளவு, பெட்ரோல் நிரப்பினால் போதும்' என, கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...

 
TOP