மாம்பழ மோர்க்குழம்பு
தேவையான பொருட்கள்:
மாம்பழம் – ஒன்று,
ஓரளவு புளித்த மோர் – 500 மில்லி,
காய்ந்த மிளகாய் – 2,
அரிசி, வெந்தயம் – தலா ஒரு டீஸ்பூன்,
துவரம்பருப்பு – 2 டீஸ்பூன்,
தேங்காய்த் துருவல் – ஒரு சிறிய கப்,
கடுகு – அரை டீஸ்பூன்,
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
செய்முறை:
* மாம்பழத்தை தோல் சீவி வேகவிட்டு, மசித்துக்கொள்ளவும்.
* வாணலியில் எண்ணெய் விட்டு அரிசி, துவரம்பருப்பு, வெந்தயம், காய்ந்த மிளகாயை வறுத்து தேங்காய்த் துருவல் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு மிக்சியில் விழுதாக அரைத்து மோருடன் நன்றாக கலக்கவும்.
* இதனுடன் உப்பு, மசித்த மாம்பழக் கூழ் சேர்த்துக் கரைத்து வாணலியில் ஊற்றி, அடுப்பில் வைத்து ஒரு கொதி வரும் போது மற்றொரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு தாளித்து சேர்த்து இறக்கவும்.
* சுவையான சத்தான மாம்பழ மோர்க்குழம்பு
0 கருத்துகள்:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...