Loading...
Thursday, 5 May 2016

சளி, இருமலை போக்கும் துளசி..

கோடைகாலத்தில் சளி, இருமல், காய்ச்சல், தொண்டை வலி போன்றவை எளிதாக வரும். வெயிலால் குழந்தைகளுக்கு அதிகம் வியர்க்கும். குழந்தைகள் குளிர்பானங்களை குடிப்பதால் தொண்டை கட்டு, சளி போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

துளசியை பயன்படுத்தி சளி, இருமலுக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: துளசி, லவங்கம், ஏலக்காய், தேன்.பாத்திரத்தில் ஒரு லவங்கம், ஒரு ஏலக்காய் தட்டி போடவும். 

இதனுடன் 10 துளசி இலைகளை போடவும். ஒரு டம்ளர் நீர்விட்டு நன்றாக கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து குழந்தைகளுக்கு ஒரு சங்கு அளவுக்கும், 3 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு 30 மில்லியும் கொடுக்கலாம்.

இதனால்  இருமல், சளி, உடல் வலி சரியாகும். கோடைகாலத்தில் குழந்தைகள் விளையாடிவிட்டு குளிர்ந்த நீரை குடிக்கின்றனர். இதனால் உள் உறுப்புகள் குளிர்வதால் சளி பிடிக்கிறது. 

குளிர்பானம் அதிகம் குடிப்பதால் குழந்தைகளுக்கு ஏற்படும் தொண்டை வலி, சளி பிரச்னைக்கான மருந்து தயாரிக்கலாம். கால் ஸ்பூன் லவங்கப்பட்டை பொடியில், ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

இதை வடிகட்டி தேன் சேர்த்து கொடுக்கலாம். 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு 30 மில்லி வரையும், மற்ற குழந்தைகளுக்கு ஒரு சங்கு அளவுக்கு கொடுக்கலாம். 

தொண்டையில் ஏற்படும் பிரச்னை, இருமல் சரியாகும். நோய் எதிர்ப்பு சக்தி அதிரிக்கும். சுக்கை பயன்படுத்தி குழந்தைகளுக்கு வெயில் காலத்தில் ஏற்படும் உடல் வலிக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் எடுக்கவும்.

எண்ணெய் உருகியதும் அதனுடன் சிறிது சுக்குப்பொடி சேர்க்கவும். இதை காய்ச்சியபின் ஆறவைத்து உடல், தலையில் அரை ஸ்பூன் அளவுக்கு தடவி குளிக்க வைத்தால், சளி பிடிக்காமல் இருக்கும். உடல் வலி போகும். சுக்கை அதிகம் சேர்த்தால் எரிச்சல் ஏற்படும்.  

கோடைகாலத்தில் குழந்தைகளுக்கு காற்றோட்டமான தளர்ந்த உடைகளை பயன்படுத்த வேண்டும்.

வெயில் காலத்தில் குழந்தைகளுக்கு தொற்று ஏற்படாமல் தடுக்கும் வகையிலான குளியல் முறை குறித்து பார்ப்போம்.ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் எடுத்துக் கொள்ளவும். 

இதில், வெட்டி வேர், சிறிது வேப்பிலை, மஞ்சள் பொடி ஆகியவற்றை சேர்த்து இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். காலையில் குழந்தைகளை குளிக்க வைக்கும்போது இந்த தண்ணீரை கலந்து குளிக்க வைக்கலாம்.

இதனால் உடல் சுத்தமாகிறது. வியர்வை வாடை இல்லாமல் போகும். சளி பிடிப்பது தடுக்கப்படுகிறது. வியர்குரு, கொப்புளங்கள் மறையும். தொற்று ஏற்படாமல் தடுக்கலாம்....

0 கருத்துகள்:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...

 
TOP