Loading...
Monday, 6 June 2016

சுவையான நோன்பு கஞ்சி செய்வது எப்படி..

முஸ்லிம்கள் ரமலான மாதம் என்றழைக்கப்ப‌டும் ஒரு மாத காலத்தில் நோன்பிருந்து  அவர்கள் ஐந்து கடமைகளின் ஒன்றான நோன்பை நிறைவேற்றுவார்கள்.

மாலையில் நோன்பை நிறைவு செய்யும் இப்தாரின் போது தமிழகத்தில் ருசி மிகு நோன்பு கஞ்சி முக்கிய இடம் பெறும்  இந்த க‌ஞ்சியின் சுவைக்கு ஈடு இனண எதுவுமே கிடையாது.

நோன்பை நிறைவு செய்தவுடன் சாப்பிடும் நோன்பு கஞ்சியில் உடலுக்கு தேவையான சக்திகள் அடங்கியுள்ளது.

இந்த நோன்பு கஞ்சி தயாரிப்பு ஊருக்கு ஊர் மாறுபடும் .ஆனால் சுவை ஒரே அளவில் ருசி மிகுதியாக இருக்கும் அதன் செய்முறை குறிப்பு

தேவையானவை:

பச்சரிசி = 500 கிராம்
பூண்டு = 1 முழு பூண்டு
கடலைப்பருப்பு = 50 கிராம்
வெந்தயம் = 2 தேக்கரண்டி
இஞ்சி = இருவிரல் அளவு
சீரகப்பொடி = 2-3 தேக்கரண்டி
மஞ்சள் பொடி = 1 டீ ஸ்பூன்
மிளகாய்பொடி = அரை டீ ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
பெரிய வெங்காயம்  = இரண்டு
கேரட் = பாதி
தக்காளி = 2 பழங்கள்
சமையல் எண்ணை = 50 மில்லி
பச்சை மிளகாய் = 2-3 (காம்பு நீக்கியது)
புதினா+மல்லி =  தலா ஒரு கொத்து
எலுமிச்சை பழம் =  ஒன்று
தேங்காய்ப் பால் = 300 மில்லி
மட்டன் எலும்பு/கறி = 100 கிராம்

சமைக்கும் முன்பு செய்ய வேண்டியவை:

1) சாதாரண தண்ணீரில் பச்சரிசி,வெந்தயம்,கடலைப் பருப்பு ஆகியவற்றை நன்கு அலசி தண்ணீர் வடித்து தனியாக எடுத்து வைக்கவும்.

2) ஆட்டுக்கறி அல்லது நெஞ்செலும்பை நீரில் அலசி உப்பு+மஞ்சள்பொடி+மிளகாய்பொடி கலந்து தயாராக வைக்கவும்.

3) தக்காளி,வெங்காயத்தை சிறுசிறு துண்டுகளாக/ஸ்லைசாக நறுக்கவும்.

4) புதினா+மல்லியை காம்பு நீக்கி இலைகளை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.

5) கேரட் மற்றும் பாதி இஞ்சியை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

6) எஞ்சிய இஞ்சியையும் பூண்டையும் தோல்நீக்கி மிக்ஸியிலிட்டு பேஸ்ட் ஆகும்படி அரைக்கவும்.

செய்முறை:

7) சட்டியை அடுப்பில் வைத்து சூடாக்கி தேவையான அளவு எண்ணைவிட்டு வெங்காயத்தை வதக்கவும்.

8) நன்கு வதங்கிய வெங்காயத்துடன் தக்காளியை சேர்த்து மேலும் வதக்கவும்.

9) ஆட்டிறைச்சி/ நெஞ்செலும்பையும் கலந்து மேலும் சிறிது நேரம் வதக்கவும்.

10) நறுக்கிய கேரட் துண்டுகள் மற்றும் முழு பச்சைமிளகாயை வதக்கும்போது சேர்த்துக் கொள்ளவும்.

11) வதங்கும்போது சீரகப் பொடி+மஞ்சள் பொடியை சிறிதளவு தண்ணீரில் கரைத்து சட்டிக்குள் இறக்கவும்

12) மல்லித் தழையைத் தூவி, சட்டியை 5-6 நிமிடங்கள் மூடவும்.

13) அடி பிடிக்காதபடி தேவையான அளவு நெருப்பைக் குறைத்து 1:3 அளவு தண்ணீரில் கொதிக்க விடவும்.

14) கொதி வந்தபிறகு அரிசியை சட்டிக்குள் மெல்ல இட்டு தொடர்ந்து 30-45 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

15). கொதிக்கும்போது பாதியளவு எலுமிச்சை சாறுபிழிந்து சட்டியில் இடவும்.

16) தேவையான அளவு உப்பிட்டு சட்டியின் அடிப்பாகம் பிடிக்காத வகையில் அடிக்கடி கிளறவும்.

17) அரிசி கரைந்தபிறகு தேங்காய்ப் பாலுடன் சமபங்கு தண்ணீர் கலந்து மேலும் ஓரிரு நிமிடங்கள் கிளறவும்.

18) புதினா இலையை கஞ்சியில் தூவி, சட்டியை நன்கு மூடிவைக்கவும். சுவையான  நோன்பு கஞ்சி தயார்.

0 கருத்துகள்:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...

 
TOP