Loading...
Thursday, 5 May 2016

தாய்மார்களுக்கான சமையல் குறிப்புகள் சில ..

அரிசி உப்புமா செய்யும்போது தாளிதம் செய்தவுடன் தண்ணீர் விடுவோம். அப்போது ஒரு கைப்பிடி உளுத்தம் பருப்பை ஊற வைத்து சிறிது கரகரப்பாக அரைத்து அந்தத் தண்ணீரில் சேர்க்கவும்.

பிறகு, அரிசிக் குருணையைப் போட்டு உப்புமா கிளறவும். சுவையும் மணமும் ஏ ஒன்!  சில நேரங்களில் ஆம்லெட் தவாவில் ஒட்டிக் கொண்டு விடும். தவாவில் இரண்டு சொட்டு எலுமிச்சைச்சாறை விட்டு தேய்த்த பிறகு ஆம்லெட் கலவையை ஊற்றுங்கள். கல்லில் ஒட்டாது... அழகாகப் பிரிந்து வரும். 

ஐந்து நிமிடங்கள் வெந்நீரில் ஊற வைத்த பிறகு சிவப்பு மிளகாயை அரைத்தால் சீக்கிரம் அரைபடும். 

மிக்ஸியில் தயிரைக் கடையும் போது, மிக்ஸி சிறிது நேரம் ஓடியதும் நிறுத்திவிட வேண்டும். பத்து நிமிடங்கள் கழித்து மிக்ஸியை மீண்டும் ஓட விட்டால், வெண்ணெய் நன்றாகத் திரண்டு வரும். கொதிக்கும் தண்ணீர் நடுவே காலையில் அரைத்த இட்லி மாவை வைத்திருந்து, மாலையில் இட்லி வார்த்தால் பூப்போல மிருதுவாக இருக்கும். 

கேரட் அல்வா செய்யும் போது, கேரட்டை கொதிக்கும் தண்ணீரில் போட்டு ஒரு நிமிடம் ஆனதும் எடுத்து, குளிர்ந்த நீரில் போடவும்.

அதன் பிறகு தோலை சீவினால் தோல் சுலபமாக நீங்கிவிடும். பாலை உறைக்கு ஊற்றியவுடன் ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாது. தயிரான பிறகுதான் வைக்க வேண்டும். 

மைசூர் ரசம் செய்யும் போது ஒரு டீஸ்பூன் வெள்ளை எள்ளை வறுத்து, நன்கு பொடி செய்து சேர்த்தால் மணமாகவும் ருசியாகவும் இருக்கும்.

ஒருமுறை கொதிக்க வைத்த பாலை மீண்டும் கொதிக்க விடக்கூடாது. லேசாக சூடுபடுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் பால் திரிந்து விடும். 

பாகற்காய் சமைக்கும் போது சிறிது நெய் ஊற்றி வதக்கினால் கசப்பு நீங்கிவிடும். தட்டை செய்யும் போது, மைதாவுக்கு பதிலாக கோதுமை மாவை ஆவியில் வேக வைத்துச் செய்தால், தட்டை அதிக ருசியுடன் இருக்கும். அடை, தோசை, வடை மாவில் வெங்காயம், கீரை, வாழைப்பூவை நேரடியாகச் சேர்க்காமல் சிறிது எண்ணெயில் நன்றாக வதக்கிய பிறகு சேர்க்கலாம்.

சுவையாக இருக்கும். காளான் மீதுள்ள அழுக்கை குழாய் நீரில் கழுவிதான் சுத்தம் செய்ய வேண்டும். தண்ணீரில் ஊறப் போடக் கூடாது. கழுவிய பிறகும் தண்ணீரில் போடக் கூடாது. 

காய்கறிக் குருமா, சப்ஜி வகைகளில் உப்பு அதிகமாகிவிட்டதா? பால் சிறிது சேர்க்கலாம். அல்லது சிறிது தேங்காயை அரைத்து குருமாவில் சேர்க்கலாம். சரியாகிவிடும். குக்கரில் பிரஷர் அடங்கியவுடன் சாதத்தை எடுத்து ஹாட்பேக்கில் போட்டு வைத்துவிட்டால், சாதம் கட்டிப் பிடிக்காமல் உதிரியாகவே இருக்கும். 

எலுமிச்சை ஊறுகாயில் கல் உப்பு சேர்க்கையில் குண்டு அல்லது நீள பச்சை மிளகாயில் தென்னங்குச்சி யால் சிறிய ஓட்டை போட்டுக் கலக்கவும்.

பிறகு எலுமிச்சைச்சாறில் ஊறிய அந்த மிளகாயை சாம்பார் சாதம், தயிர் சாதம், ரசம் சாதம், காரக்குழம்பு சாதம் என எல்லாவற்றிலும் சேர்க்கலாம்.

தனி ருசி!  கறிவேப்பிலையை வெறும் கடாயில் வறுத்து, பொடித்து தட்டையில் சேர்க்கலாம். தட்டை கமகமக்கும்... இருப்புச்சத்தும் கிடைக்கும்...

0 கருத்துகள்:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...

 
TOP