அனைத்து காலங்களிலும் கிடைக்கும் ஓர் அற்புதமான பழம் தான் பப்பாளி. மேலும் இது அனைவருக்கும் விரும்பி சாப்பிடும் ஓர் பழமும் கூட.
ஆனால் சிலருக்கு இப்பழம் பிடிக்காது. அத்தகையவர்கள் இப்பழத்தை ஜூஸ் வடிவில் எடுத்துக்கொள்ளலாம். ஏனெனில் பப்பாளிபழத்தில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன.
இங்கு தினமும் ஒரு டம்ளர் பப்பாளி ஜூஸைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பட்டியலிடப்பட்டுள்ளது.
உயிரைப் பறிக்கும் புற்றுநோய்களைப் பப்பாளி ஜூஸ் குடிப்பதன் மூலம் தடுக்கலாம்.
ஏனெனில் பப்பாளியில் நார்ச்சத்து ஏராளமாக நிறைந்துள்ளது. இது புற்றுநோய்களை உண்டாக்கும் டாக்ஸின்களை குடலில் இருந்து முற்றிலும் வெளியேற்றி, குடல் புற்றுநோயின் அபாயத்தில் இருந்து பாதுகாப்பு வழங்கும்.
பப்பாளியில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இது செரிமான மண்டலத்தின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு உதவும். குறிப்பாக மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்களுக்கு இப்பழம் நல்ல நிவாரணத்தை வழங்கும்.
பப்பாளி உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு மிகச்சிறந்த பழம். இப்பழத்தை தினமும் ஜூஸ் போட்டு குடித்து வந்தால், அதில் உள்ள சத்துக்கள், இரத்த நாளங்களில் அதிக அழுத்தம் கொடுப்பதைக் குறைக்க உதவும்.
பப்பாளி ஜூஸை தினமும் குடித்து வருவதன் மூலம், பக்கவாதம் வருவதைத் தடுக்கலாம். மேலும் பெரும்பாலான மருத்துவர்களும் இதையே பரிந்துரைக்கிறார்கள்.
இன்றைய காலத்தில் காற்று மாசுபாட்டினால், அசுத்த காற்றை சுவாசிப்பதால், நுரையீரலில் அழுக்குகள் அதிகம் படிந்து, பலருக்கும் சுவாச பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஆனால் தினமும் பப்பாளி ஜூஸை குடித்து வந்தால், நுரையீரலில் உள்ள காயங்கள் மற்றும் அழுக்குகள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, நுரையீரல் பிரச்சனைகள் தடுக்கப்படும்.
தொண்டையில் அடிநாச்சதையால் கஷ்டப்படுபவர்கள் , நன்கு பழுக்காமல், ஓரளவு பழுத்த பப்பாளியை அரைத்து ஜூஸ் செய்து தேன் கலந்து குடித்து வரகுணமாகும்.
உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள நினைப்பவர்கள், பப்பாளி ஜூஸை குடித்து வர, உடலில் உள்ள தேவையற்ற டாக்ஸின்கள் வெளியேற்றப்படும்.
பப்பாளி ஜூஸை குடித்து வருவதன் மூலம் சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பாதை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வருவதைத் தடுக்கலாம்.
பப்பாளி ஜூஸை அன்றாடம் உணவில் சேர்த்து வந்தால், அல்சர், வயிற்று பிரச்சினைகள், முகப்பரு, படர்தாமரை, பைல்ஸ், சரும அரிப்புக்கள் போன்றவற்றில் இருந்து விலகி இருக்கலாம்.
தினமும் பப்பாளி ஜூஸ் குடித்து வந்தால், சருமத்தின் பொலிவு மேம்படும். ஏனெனில் இதில் உள்ள பாப்பைன் என்னும் நொதியானது இறந்த செல்களை வெளியேற்றி, சருமத்தில் பிரச்சினைகள் வராமல் பாதுகாத்து, சரும அழகை அதிகரிக்கும்...
0 கருத்துகள்:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...