☆மோர்க்குழம்பு செய்யும்போது கொஞ்சம் அன்னாசிப்பழத் துண்டுகளைச் சேர்க்கவும். கமகமவென வாசனையோடு, ருசியாகவும் இருக்கும்.
☆ பூரி மாவில் கொஞ்சம் சோயா மாவும் சேர்த்தால், பூரி மொறுமொறுவென இருக்கும். சோயா மாவில் புரதம் அதிகமாக இருப்பதால் ‘புரத பூரி’ என்றுகூட இதைச் சொல்லலாம்!
☆ காய்கறி பொரியல் மீந்துவிட்டால், அதைக் கொண்டு ஸ்டஃப்டு சப்பாத்தி, ஸ்டஃப்டு தோசை செய்யலாம். பொரியலோடு தேங்காய்த்துருவல் சேர்த்துப் பூரணமாகப் பிடித்தால், காரக்கொழுக்கட்டை தயார்!
☆ கோதுமை ரவையை ஒரு மணி நேரம் மோரில் ஊற வைத்து, மிளகாய், பெருங்காயம் போட்டு அரைத்து தோசை வார்த்து, மிளகாய் சட்னியுடன் பரிமாறினால் சுவை பிரமாதம்!
☆ கீர், பாயசம் செய்யும்போது, கலவை நீர்த்துப் போய்விட்டதா? கொஞ்சம் கசகசாவை நீரில் ஊற வைத்து, மை போல அரைத்துச் சேர்க்கவும். கீர் கெட்டியாகவும் சுவையாகவும் இருக்கும். கசகசா உடலுக்குக் குளுமை தரும்.
☆ தேங்காய் எண்ணெய், கெரசின் இரண்டையும் சம அளவு கலந்து கேஸ் ஸ்டவ்வை துடைக்கப் பயன்படுத்தினால் பளிச்சென இருக்கும்.
☆ வடுமாங்காய் ஊறிய சாற்றில் பச்சை மிளகாய், கொத்தவரங்காய், பாகற்காய் போன்றவற்றை ஊற வைத்து காயப் போட்டு வற்றலாகப் பயன்படுத்தலாம். இவற்றை எண்ணெயில் வறுத்துச் சாப்பிட்டால் வடுமாங்காயின் புளிப்பு, மிளகாயின் காரம் எல்லாம் சேர்ந்து மிகவும் சுவையாக இருக்கும்.
☆ ஜவ்வரிசி வடாம் உடைந்து, தூளாகி இருந்தால், அவற்றை பஜ்ஜி மாவில் இரண்டு நிமிடங்கள் ஊறப் போட்டு, பிறகு பஜ்ஜி சுட்டால் சுவை பிரமாதமாக இருக்கும்.
☆ ரசம் வைக்கும்போது வெற்றிலை, வல்லாரை, தூதுவளை, துளசி ஆகியவற்றில் ஏதாவது ஒன்றைத் தட்டிப்போட்டு ரசம் வைத்து அருந்தினால் ஜலதோஷம் குணமாகும்.
0 கருத்துகள்:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...