சமையல் அறையை அமைப்பதில் நாம் எடுத்துக் கொள்ளும் அக்கறையை அங்குள்ள பாதுகாப்பு அம்சங்களில் அவ்வளவாக காட்டுவதில்லை.
இல்லத்தரசிகள் அதிகமாக புழங்கும் இடம் சமையலறை தான். குழந்தைகளின் குறும்புகள் அரங்கேறுவதும் அங்குதான்.
கேஸ் அடுப்பு உபயோகம், சமையலுக்கான கைவேலைகள், அரைக்கும் வேலைகள், கத்தியால் காய்கறி நறுக்கும் வேலைகள், சூடான பாத்திரங்களை கையாள்வது என்று எப்போதும் கவனமாக செயல்பட வேண்டிய இடம் இது.
மின்சாதனங்களை தினமும் பயன்படுத்தக்கூடிய இடங்களில் சமையலறையும் ஒன்று. அதன் பாதுகாப்பு நடவடிக்கைகளில் நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பதை இங்கு பார்க்கலாம்.
* மின்சாதனங்கள் அனைத்தையும் சரியாக அமைப்பதோடு, அதற்கான முறையான பராமரிப்புகளும் முக்கியம். ஒயர் அமைப்புகள் மின்னழுத்த வேறுபாடுகளை தாங்கும்படி இருக்க வேண்டும்.
அங்கே ‘3 பின்கள்’ கொண்ட ‘பிளக்குகள்’ மட்டுமே பயன்படுத்துவது முக்கியம். ‘பிளக் போர்டுகள்’ குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் அமைக்க வேண்டும். பாத்திரங்கள் சுத்தம் செய்யும் ‘சிங்க்’ அருகில் ‘ஸ்விட்ச் போர்டு’ வரக்கூடாது.
* கிரைண்டர்களுக்கு சரியான ‘எர்த்’ அமைப்பு முக்கியம். ஈரமான கைகளுடன் அதைத் தொடும் சந்தர்ப்பங்கள் இருப்பதால் மின்பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க அது அவசியமான ஒன்றாகும். ஒரு சமயத்தில் ஒரு மின் சாதனத்தை மட்டும் கையாள வேண்டும்.
* ஜன்னல்கள் நன்றாக காற்றோட்டம் உள்ளதாக இருக்க வேண்டும். உள்ளிருக்கும் வெப்பக் காற்றை சரியாக வெளியேற்றும் விதமாக ‘எக்ஸ்ஹாஸ்ட்’ காற்றாடி பொருத்தப்பட வேண்டும்.
* சமையல் அறையில் சேர்கள், சின்ன ஸ்டூல்கள் போன்றவற்றை வைப்பதை தவிர்க்கவேண்டும். குழந்தைகள் அதன் மீது ஏறி நின்று ‘ஸ்விட்ச் போர்டுகளை’ தொட முயற்சிப்பது தடுக்கப்படும்.
* கத்தி போன்ற கூர்மையான கருவிகளை பெரியவர்களுக்கு மட்டும் எட்டும் உயரத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். குக்கர் மற்றும் மற்ற சூடான சமையல் கருவிகளை அவசரமாக கையாள்வது தவிர்க்கப்பட வேண்டும்.
* மின்சாதனங்கள் மற்றும் சமையலறை கப்போர்டுகளை, குழந்தைகள் திறக்க இயலாதவாறு சரியான கதவு அமைப்பு கொண்டு மூடும்படி அமைப்பது மிக அவசியம்.
* மின்சார சாதனங்களை சுத்தம் செய்யும் சமயங்களில் கண்டிப்பாக அதன் மின் இணைப்பை துண்டிப்பதோடு, பிளக்கையும் அகற்றி விடுவது முக்கியமானது.
* சமையல் எரிவாயு சம்பந்தப்பட்ட வேலைகளை வீட்டில் இருப்பவர்களே செய்வதை தவிர்க்க வேண்டும். சிறிய தீ அணைக்கும் கருவியை சமையலறையில் வைத்திருப்பதும் பாதுகாப்புக்கு உகந்தது.
0 கருத்துகள்:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...