மிளகு - சீரக மட்டன் மசாலா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
எலும்புடன் கூடிய மட்டன் - 6௦௦ கிராம் (பெரிய துண்டுகளாக வெட்டியது)
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
பட்டை - சிறிய துண்டு
கிராம்பு - 3
வெங்காயம் - 2
பூண்டு - 1௦ சிறிய பல்லு
பச்சை மிளகாய் - 2
இஞ்சி-பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி (விரும்பினால்)
கொத்தமல்லி இலை - சிறிதளவு
தண்ணீர் - தேவைக்கேற்ப
உப்பு - சுவைக்கேற்ப
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
வறுத்து அரைக்க :
மிளகு - ¾ மேசைக்கரண்டி
சீரகம் - ¾ மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - 7-8 (விரும்பினால்)
செய்முறை :
* மட்டனை நன்றாக கழுவி வைக்கவும்.
* வெங்காயம், கொத்தமல்லி, மிளகாயை பொடியான நறுக்கவும்.
* பிரஷர் குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு சேர்த்து தாளித்த பின் நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து மிதமான சூட்டில் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
* அடுத்து அதில் பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
* மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு மற்றும் மட்டன் துண்டுகள் சேர்த்து 4-5 நிமிடங்கள் வதக்கவும்.
* ½ கப் தண்ணீர் சேர்க்கவும். எலுமிச்சை சாறு சேர்ப்பதாக இருந்தால், இப்போது சேர்க்கவும்.
* குக்கரை மூடி மிதமான சூட்டில் சமைக்கவும்.
* முதல் விசில் வந்தவுடன், அடுப்பைக் குறைத்து 15-18 நிமிடங்கள் பிரஷரில் சமைக்கவும். அடுப்பை அணைத்து, பிரஷர் அடங்கியவுடன் திறக்கவும்.
* மிளகு மற்றும் சீரகத்தை தனியாக ஒரு வாணலியில் நிமிடங்கள் வறுக்கவும். கறிவேப்பிலையுடன் சேர்த்து தண்ணீர் இல்லாமல் பொடியாக அரைத்து சமைத்த கறியுடன் சேர்க்கவும்.
* அடி பிடிக்காமல் இருக்க 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்க்கவும்.
* மிதமான சூட்டில் 5 நிமிடங்கள் அல்லது குழம்பு கெட்டியாகும் வரை கொதிக்க வைக்கவும்.
* கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
0 கருத்துகள்:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...