சமையல் அறையில் பாதுகாப்பு நடவடிக்கை....
.................................................
பெண்கள் அவசர அவசரமாக சமையல் செய்யும் போது சில விபரீதங்களை சந்திக்க நேரிடுகிறது. வீட்டில் அளவுக்கு அதிகமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய ஒரே இடம் சமையலறை தான்.
மேலும் பெண்கள் சமையலறையில் உள்ள பொருட்களை பயன்படுத்துவதில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். சமையலறையில் நீங்கள் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது உங்கள் கவனத்தை திசை திருப்புவதில் குழந்தைகள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
கூர்மையான கத்தி போன்ற கருவிகள் அங்கே அடுப்பு மேடையில் இருப்பதால், அதனை கொண்டு அவர்கள் தங்களை காயப்படுத்திக் கொள்ளலாம். அதனால் குழந்தைகளை சமையலறையை விட்டு வெளியேற்றுங்கள்.
அவசரமான வேலை பார்ப்பதாலேயே சமையலறையில் பல விபத்துகள் நடைபெறுகிறது. வேகமாக வேலை செய்யும் போது கவனக்குறைவு ஏற்பட்டு அதனால் விபத்துகள் நேரிடும். காய்கறிகளை வேகமாக நறுக்காதீர்கள், அதனால் உங்கள் விரல்கள் வெட்டுப்படலாம். அதே போல் அடுப்பில் இருக்கும் சூடான சட்டி அல்லது குக்கரை வேகமாக இறக்க முயற்சி செய்யாதீர்கள். அது உங்கள் மேலே விழுந்து விடலாம்.
செய்யும் வேலையை பொறுமையுடன் செய்யுங்கள். மைக்ரோவேவ்வில் வைக்கப்படும் பாத்திரங்களில் பொதுவாக கடும் சூடு இருக்கும்.
அவைகளை வெறும் கையால் தொடவே முடியாது. அடுப்பில் எதையாவது கிண்டும் போது, நீங்கள் நிற்கும் திசையை நோக்கி கிண்டாதீர்கள். நீங்கள் நிற்பதற்கு எதிர் திசையிலேயே எப்போதும் கிண்டுங்கள். அப்படி செய்தால் சமைக்கும் போதோ கொதிக்க வைக்கும் போதோ, தீக்காயங்களில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம்.
அதே போல் அடுப்பில் இருக்கும் சூடான சட்டி அல்லது குக்கரை வேகமாக இறக்க முயற்சி செய்யாதீர்கள். அது உங்கள் மேலே விழுந்து விடலாம். செய்யும் வேலையை பொறுமையுடன் செய்யுங்கள்.
மைக்ரோவேவ்வில் வைக்கப்படும் பாத்திரங்களில் பொதுவாக கடும் சூடு இருக்கும். அவைகளை வெறும் கையால் தொடவே முடியாது. அடுப்பில் எதையாவது கிண்டும் போது, நீங்கள் நிற்கும் திசையை நோக்கி கிண்டாதீர்கள்.
நீங்கள் நிற்பதற்கு எதிர் திசையிலேயே எப்போதும் கிண்டுங்கள். அப்படி செய்தால் சமைக்கும் போதோ கொதிக்க வைக்கும் போதோ, தீக்காயங்களில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம்.
கொதிக்கும் நீர் அல்லது எண்ணெயினால் உடல் பகுதிகளில் கொப்புளங்கள் ஏற்படலாம். கத்திகளை திறமையாக பயன்படுத்த வேண்டும்.
சமையலறையில் கத்தியை கையாளுவது, சமையலறையில் உள்ள சவாலான வேளைகளில் ஒன்றாகும். எப்போதும் கூர்மையான கத்தியை பயன்படுத்த வேண்டும்.
காரணம் மொட்டை கத்தி அடிக்கடி வழுக்கி, காயங்களை ஏற்படுத்தும். காயம் ஏற்படாமல் கத்தியை எப்படி திறமையாக கையாளுவது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
நன்றாக பழக்கம் ஏற்படும் வரை கத்தியை மெதுவாக கையாளுங்கள். சூடான சட்டிகளை தூக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்களால் எவ்வளவு எடையை சுலபமாக தூக்க முடியும் என்பது உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்.
உங்களால் சில பாத்திரங்களை தூக்க சிரமமாக இருந்தால், வீட்டில் உள்ள ஆண்களின் உதவியை பெற்றுக் கொள்ளுங்கள். இல்லையென்றால் அதில் உள்ளதை கொஞ்சம் கொஞ்சமாக வேறு சில பாத்திரத்தில் மாற்றி அவைகளை தேவையான இடத்திற்கு தூக்கிச் செல்லுங்கள்.
கொதிக்கும் உணவு மேலே பட்டால் எவ்வளவு காயம் ஏற்படுமோ, அதே அளவு காயம், உணவின் ஆவி முகத்தில் அடிக்கும் போதும் ஏற்படும். ஆவி பறக்கும் உணவுகளை கையாளும் போது அதிக கவனம் தேவை.
உதாரணத்திற்கு, மைக்ரோவேவ்வில் எதையாவது கொதிக்க வைக்கும் போது, அதன் மூடி உங்கள் பக்கம் திறந்து இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
0 கருத்துகள்:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...