வீடுகளுக்கு வண்ணங்களை தேர்ந்தெடுத்து பூசுவது என்பது ஒரு கலையாகவே பார்க்கப்படுகிறது.
வழக்கமாக ‘பெயிண்டு’ அடிக்கும் வேலைகளை ‘பெயிண்டர்கள் தான்’ செய்வார்கள்.
சதுர அடிகள் பரப்பு அடிப்படையில் ஒப்பந்த அடிப்படையில் ‘பெயிண்டிங்’ வேலைகள் செய்யப்படும்.
அதுவரையில் நமக்கு பிரச்சினைகள் இல்லை. ஆனால், வீட்டில் இருக்கும் தனிப்பட்ட ஒரு சுவருக்கு மட்டும் ஏதாவது அழகியல் சம்பந்தமான ‘டிசைன்’ செய்ய வேண்டும் என்றால் அதற்கு நிறைய ‘பெயிண்டர்கள்’ முன் வருவதில்லை. அதுபோன்ற சமயங்களில் கச்சிதமாக பிளான் செய்து நாமே அதை செய்வது ஒரு பொழுதுபோக்காக மட்டுமல்லாமல், வித்தியாசமான அலங்காரமாகவும் இருக்கும். நாமே செய்யலாம்
மேலை நாடுகளில் பெரும்பாலும் வீட்டு உரிமையாளர்களே வண்ணம் பூசுவது தொடர்பான பெரும்பாலான வேலைகளை செய்து விடுவார்கள்.
வருடத்தின் சில குறிப்பிட்ட நாட்களில் தமது அறையில் ஏதாவது ஒரு சுவருக்கு அழகான ‘பெயிண்டிங்’ வேலையை செய்யும் வழக்கம் பெரிய ‘மெட்ரோ சிட்டிகளில்’ இப்போது இருக்கிறது.
அதற்காக ‘பெயிண்டர்கள்’ தரக்கூடிய எளிய சில குறிப்புகளை இங்கே காணலாம். அவசியமான பொருட்கள்
நாமே ‘பெயிண்டிங்’ வேலையை செய்யும்போது சில பொருட்களை கைவசம் வைத்திருப்பது முக்கியம். அவை என்னென்ன..?
1.‘அலுமினிய லேடர்’ எனப்படும் ஏணி.
2. ‘பெயிண்டு’ மற்றும் ‘பிரைமர்’ ஆகியவற்றை கலக்க சரியான அளவுள்ள டப்பாக்கள்.
3. சுவர்கள் அல்லது மேற் கூரையில் இருக்கும் கறைகள் மற்றும் அழுக்குகளை சுத்தப்படுத்துவதற்கு தேவையான உப்புத்தாள்.
4. ‘பெயிண்டு’ பூசப்படும்போது கீழே ஒழுகி தரையில் விழும் ‘பெயிண்டு’ துளிகளை துடைப்பதற்கு பருத்தியாலான துணி.
5. நல்ல தரமான ‘கம்பெனிகளின் ப்ரஷ்’ வகைகள் மற்றும் ‘ரோலர்கள்’.
6. தேவைப்பட்டால் ‘ஸ்ப்ரே கன்’ ஒன்றையும் வைத்துக்கொள்ளலாம்.
7. சுவர் ஓரங்களில் வேறு வண்ணங்களில் ‘பார்டர்’ தருவதாக இருந்தால் அதற்காக உபயோகப்படும் அகலமான ‘டேப்’ வகைகள். வண்ணம் பூசும் முறை
முதலில் சுவரை அதன் வழவழப்பான தன்மை இல்லாதவாறு உப்புத்தாள் கொண்டு தேய்த்து பழைய வண்ணத்தின் சுவடுகள் இல்லாதவாறு தயார் செய்து கொள்ளவேண்டும். பழைய வண்ணத்தை முற்றிலுமாக அகற்றினால்தான் புதிய வண்ணம் சுவரில் நன்றாக ஒட்டும்.
விரிசல்கள் அல்லது ஈரம் ஆகியவை வண்ணம் பூசுவதற்கு முன்பாக சரி செய்யப்பட வேண்டும். மேற்கூரைக்கு வண்ணம் பூசுவதாக இருந்தால், அதை செய்து முடித்த பிறகுதான் சுவர்களுக்கு வண்ணம் பூச வேண்டும்.
சுவர்களுக்கு பூசிய பிறகு கதவு மற்றும் ஜன்னல்களுக்கு வண்ணம் பூசலாம்.வழவழப்பான சுவர்கள்
பழைய வண்ணங்கள் அல்லது பராமரிப்பு காரணமாக சுவர் பரப்பு வழுவழுப்பாக இருந்தால் ‘பெயிண்டானது’ ஒன்றுக்கும் மேற்பட்ட பூச்சுக்கள் தரப்படவேண்டும்.
‘வால்பட்டி’ ஒரு ‘கோட்’ அடித்த பிறகு ‘பெயிண்டின்’ வழுவழுப்பு தன்மையை கவனத்தில் கொண்டு வர்ணம் பூசப்படும்போது சிறிய இடைவெளிகள் இல்லாமல் தடுக்கப்படும்.‘பிரஷ்’ மற்றும் பூசும் முறை
நல்ல தரமான பிரஷ் வகைகளை பயன்படுத்தி ‘பெயிண்டு’ அடிக்கப்படும்போது அதன் குச்சங்கள் நுட்பமாக இருப்பதால் ‘பிரஷ்’ கொண்டு பூசப்பட்டதற்கான அடையாளங்கள் சுவரில் தெரியாது. ‘ரோலர்’ முறையிலும் வேலைகளை செய்து முடிக்கலாம்.
அத்துடன் காளான் தடுப்பு முறைகளை கையாள்வதும் முக்கியம். பொதுவாக வீடுகளுக்கு ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை ‘பெயிண்டிங்’ வேலையை செய்வது அவசியமானதாகும்.துணிகளை விரிக்கவும்
‘சீலிங்’ மற்றும் சுவர்களுக்கு நமது எண்ணப்படி வண்ணங்களை பூசும்போது கீழே சிதறும் ‘பெயிண்டு’ வகைகள் தரைத்தளத்தில் கறையாக படியாமல் இருக்க பழைய துணிகளை விரித்து வைத்திருப்பது அவசியம்.
தரையில் ‘பெயிண்டு’ கறைகள் படிந்துவிட்டால், உடனே துடைத்து விட்டால் பாதிப்புகள் இருக்காது. ஆனால் ‘பெயிண்டானது’ காய்ந்துபோகும் வரையில் விட்டுவிட்டால் கறையாக மாறி விடக்கூடும்.
0 கருத்துகள்:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.