இருசக்கர வாகனம் ஓட்டும் பெண்களே...!!!
* இருசக்கர வாகனம் ஓட்டும் பெண்கள் துப்பட்டா, புடவை உள்ளிட்ட ஆடைகளை சரியாக அணிந்து அல்லது முடிச்சு போட்டுக் கொண்டு வாகனம் ஓட்டுங்கள். கார் ஓட்டுபவரானால் சீட் பெல்ட் முக்கியம்.
* வாகனத்தில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால் நடுசாலையில் இறங்கி பார்க்காதீர்கள். சாலை ஓரமாக நிறுத்தி பரிசோதியுங்கள்.
* உங்கள் கைப் பை அல்லது விலை உயர்ந்த பொருள்களை காரின் முன் இருக்கையில் வைக்க வேண்டாம். திருடனின் பார்வையில் எளிதில் சிக்காமல் தப்பிக்க இது உதவும்.
* வாகனத்தில் செல்லும்போது நீங்கள் எங்கு செல்கிறீர்கள், எந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்துச் செல்வீர்கள் என்பதை வீட்டில் இருக்கும் யாருக்காவது தெரிவித்துச் செல்லுங்கள்.
* வெவ்வேறு சிறிய பணிகளுக்காக அடிக்கடி பயணம் மேற்கொள்ளாமல், ஒரே பயணத்தில் வேலைகளை முடித்துவிடுங்கள். எரிபொருளும் மிச்சம், உங்களுக்கு சாலையில் செல்லும் "ரிஸ்க்’கும் மிச்சம்.
* பிரேக்கில் கால் வைத்த வண்ணம் வாகனம் ஓட்டாதீர்கள். இது எரிபொருளை அதிகம் வீணாக்கும்.
* காரில் உள்ள ஏ.சி. உபயோகத்தைக் குறைப்பதால் 8 சதவீதமும், தேவையில்லாத பொருள்கள் அல்லது எடையைக் குறைப்பதன் மூலம் 4 சதவீதமும் எரிபொருளை சேமிக்க முடியும்.
* கால சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் கோடையில் கண்களுக்கு குளிர்ச்சியாக கண்ணாடி அணிந்துக் கொள்ளுங்கள். மழைக் காலத்தில் ரெயின்கோட் அணிந்து, மிதமான வேகத்தில் வாகனம் ஓட்டுங்கள்.
* செல்போனில் பேசிக் கொண்டு வாகனம் ஓட்டாதீர்கள். வாகனம் ஓட்டும் போது உங்கள் கவனம் முழுவதும் வாகனம் ஓட்டுவதில் மட்டுமே இருக்க வேண்டும்.
0 கருத்துகள்:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...