உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிக வேகமாகவும், அதிக அளவிலும் மாதுளை அழிக்கிறது.
பொதுவாக பழங்கள் நமக்குத் தேவையான சத்துகளை அள்ளி வழங்குபவை. உடலுக்கும், சருமத்துக்கும் தீங்கு விளைவிக்காதவை.
ஒவ்வொரு பழத்துக்கும் ஒரு சிறப்பு உள்ளது. மாதுளையின் பழம், பூ, பட்டை ஆகிய அனைத்திலும் மருத்துவக் குணங்கள் நிறைந்திருக்கின்றன.
மாதுளம்பழத்தில் இரும்பு, சர்க்கரை, சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் அனைத்து வகையான தாது உப்புக்களும், உயிர்ச் சத்துக்களும் அடங்கியுள்ளன. இப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிக வேகமாகவும், அதிக அளவிலும் மாதுளை அழிக்கிறது. அதனால் நோய் நீங்கி, ஆரோக்கியமும் சக்தியும் கிடைக்கிறது.
மாதுளையைப் பயன்படுத்தும் சில விதங்களைப் பார்க்கலாம்...
மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து, 25 கிராம் சர்க்கரை சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் சரியாகும். மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும்.
மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ரத்த மூலம் நீங்கும். மூலக் கடுப்பும், உடல் சூடும் தணியும். வாந்தி, மயக்கத்துக்குக் கொடுத்தால் அவை தீரும்.
மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக்கொண்டால் தலைவலி, வெப்பநோய் தீரும். இதன் இலைகளை அரைத்துப் பசையாக்கி கண் மீது தடவினால் கண் நோய் குணமாகும். இலைச்சாறு, வயிற்றுப்போக்கைத் தீர்க்கும். மாதுளையின் தண்டும், வேர்ப்பட்டையும் வயிற்றுப் புழுக்களுக்கு எதிரானது. தசையை இறுக்கும் தன்மை கொண்டது.
மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக்கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.
மாதுளம் பழம் மலச்சிக்கலைப் போக்கும். வறட்டு இருமலால் அவதிப்படுபவர்களுக்கு இது வரப்பிரசாதம் ஆகும். பித்தம் தொடர்புடைய நோய்களை குணமாக்கும். எலும்புகளுக்கும், பற்களுக்கும் உறுதியை அளிக்கும் சக்தி இதற்கு உண்டு.
0 கருத்துகள்:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...