தேவைக்கு அதிகமாக கீரை மீதமிருந்தால், அவற்றின் வேர்களை நறுக்கிவிட்டு, கழுவி ஒரு தாளில் ஈரம் போக உலர்த்துங்கள்.
பின்னர் கடாயை சூடாக்கி அதில் சில வினாடிகள் நிறம் மாறாமல் கீரையை போட்டு புரட்டி ஆறியதும் ஃபிரிட்ஜில் ஒரு கவரில் போட்டு வைத்துக் கொண்டால், 4 நாட்கள் ஆனாலும் அழுகாமல் பசுமையாகவே இருக்கும்.
சிறிது சிறிதாக மீந்துவிட்ட ஊறுகாய்கள் எல்லாவற்றையும ஒன்று சேர்த்து மிக்ஸியில் அரைத்து சிறிது வெல்லம் சேர்த்து கடாயில் போட்டு கிளறி ஜாம் போல தயாரிக்கலாம்.
இதை சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக் கொண்டால் சுவையாக இருக்கும்.
பால், தயிர் பாத்திரங்களில் கறை பிடித்துவிட்டால் தேய்ப்பது கடினம்.
பாத்திரத்தில் முக்கால் பாகம் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அரை மூடி எலுமிச்சையை பிழிந்து மூடி வைக்கவும். ஐந்தே நிமிடங்களில் எல்லா கறைகளும் கரைந்து வந்துவிடும்.
தக்காளி, பசலைக்கீரை, முட்டை, பப்பாளி மற்றும் கீரைகளில் வைட்டமின் ‘ஏ’ இருப்பதால் தினமும் ஏதேனும் ஒன்றை உணவில் சேர்த்துக் கொண்டால் கண்களுக்கும் அறிவுத்திறனுக்கும் நல்லது. சாம்பார் பொடி தயாரிக்கும் போது சிறிது கல் உப்பு சேர்த்தால் பொடி கெட்டுப் போகாமல் நீண்டநாள் வரும்.
மைதாவை நீர்விட்டு பிசையாமல் அப்படியே ஒரு பாத்திரத்தில் கொட்டி நீராவியில் வேக வைத்து எடுத்து தேவைக்கேற்ப உப்பும் நெய்யும் சேர்த்து பிசைந்து முறுக்கு செய்தால் கரகரப்பாக இருக்கும்.
ஒரு கப் வெங்காயம், அரைகப் தக்காளியை துண்டுகளாக்கி அதோடு அரை கப் உருளைக்கிழங்குத் துண்டுகளையும் நன்றாக வதக்கியபின், வெண்டைக்காய் போட்டு வதக்கினால் பொரியலாகவும், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள கிரேவியாகவும் உபயோகிக்கலாம்.
எப்பொழுதும் போடும் மிளகு, சீரகத்துடன் ஒரு பச்சை மிளகாய், சிறிது கறிவேப்பிலை, 2 பூண்டு பல், சின்ன வெங்காயம் 2 சேர்த்து தட்டி போட்டு ரசம் வைத்தால் ருசியாகவும், வாசனையாகவும் இருக்கும்.
ஒரு கப் கொப்பரை தேங்காய்க்கு 1/4 கப் பூண்டு, தேவையான உப்பு, மிளகாய், புளி சேர்த்து அரைத்து வைத்துக் கொண்டால் அவசர தேவைக்கு சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம்.
இட்லி, தோசைக்கும் நன்றாக இருக்கும். கோதுமை தோசை செய்யும் போது சிறிதளவு உளுத்தம்பருப்பை ஊறவைத்து அரைத்து, அதனுடன் கலந்து வார்த்தால் சுவையாக இருக்கும்.
எந்த காய் பொரியல் கீரைப் பொரியலிலும் தேங்காய் சேர்ப்பதற்குப் பதில் கடுகு, உளுந்து தாளித்தவுடன் வெங்காயம் போட்டு வதக்கி அதன் மேல் வறுத்த அரிசி அல்லது வறுத்த நிலக்கடலைப் பொடியைத் தூவினால் ருசியும் கூடும். புதுமையாகவும் இருக்கும்.
ஒரு கப் தயிர், ஒரு கப் ரவை, ஒரு கப் கார்ன் ஃப்ளவர் மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சைமிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து பிசைந்து தட்டி எண்ணெயில் பொரித்தெடுத்தால் திடீர் மொறுமொறு வடை ரெடி!
0 கருத்துகள்:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...