டீ தயாரிக்கும் முன்பு தூளை குளிர்ந்த நீரில் 10 நிமிடம் ஊறவைத்து பின்னர் தயாரித்தால் வழக்கத்தைவிட கூடுதல் திடம், மணம், சுவையுடன் சூப்பராக இருக்கும். மழைக்காலத்தில் ஊறுகாயில் பூஞ்சை படிகிறதா? ஒரு பாட்டில் ஊறுகாய்க்கு இரண்டு டீஸ்பூன் அளவு வினிகரை ஊற்றி வைத்தால் ஊறுகாய் நீண்டநாள் கெடாது.
ஜவ்வரிசியை ஊறவைத்து இஞ்சி, பச்சை மிளகாய், சிறிதளவு தயிர், கறிவேப்பிலை ஆகியவை சேர்த்து குணுக்கு செய்தால் சுவையாக இருக்கும்.
வெங்காயம் வதக்கும்போது பொன்னிறமாக வதக்கினால் ஜீரணமாகும். அடுப்பிலிருந்து இறக்குவதற்குமுன் சிறிதளவு தண்ணீர் சேர்த்தால் மேலும் எளிதில் ஜீரணமாகும்.
மழைக்காலத்தில் அப்பளம் நமுத்துப்போகாமல் இருக்க உளுத்தம்பருப்பு வைத்திருக்கும் டப்பாவில் மேலாக வைத்து இறுக மூடி வைத்தால் போதும் மிளகாய் வற்றலை மெஷினில் கொடுத்து அரைக்கும்போது 1 டீஸ்பூன் லவங்கம், 2 டீஸ்பூன் ஏலக்காய் போட்டு அரைத்து வைத்துக்கொண்டால் உருளைக்கிழங்கு, வாழைக்காய் போன்ற ரோஸ்ட் கறிகளுக்கு போடலாம்.
மசாலா வாசனையுடன் சுவை தூக்கலாக இருக்கும்.
மசால் வடைக்கு பருப்பு வகைகள் அரைமணி நேரம் ஊறியபின் ஒரு பிடி பாசிப்பருப்பையும், ஒரு பிடி ஜவ்வரிசியையும் நன்றாக நீர்விட்டுக் களைந்து பிழிந்து மாவுடன் சேர்த்து வடை செய்தால் வடை மொறுமொறுவென்று சுவையாக இருக்கும்.
பருப்புகளின் விலை ஏறிவிட்ட நிலையில் இட்லி தோசைக்கு ஊறவைக்கும் உளுத்தம்பருப்பு ஒரு பங்கு போடும் இடத்தில் கால் பங்கு போட்டு மீதி முக்கால் பங்கிற்கு பூசணிகுடலை சேர்த்து அரைத்து தோசை வார்த்தால் பட்டுபோல் மிகவும் சுவையாக இருக்கும்.
பிஞ்சு வெண்டைக்காய்களைப் போட்டும் தோசை வார்க்கலாம் பிரெட்டை டோஸ்ட் செய்யும் போது நெய்யின் அளவைக் குறைக்க பால் பவுடர் அல்லது பூஸ்ட், ஹார்லிக்ஸை வெந்நீரில் கரைத்து பிரெட் மீது தடவிச் செய்தால் டோஸ்ட் அபார சுவையுடன் இருக்கும்.
0 கருத்துகள்:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...