Loading...
Saturday, 23 April 2016

இனிப்பான மாம்பழ பாயசம் செய்வது எப்படி.. !!

தேவையான பொருட்கள் : 

தித்திப்பான மாம்பழக் கூழ் - ஒரு கப், 
சர்க்கரை - அரை கப், 
பால் - ஒரு லிட்டர், 
அரிசிக்குருணை - 2 டேபிள்ஸ்பூன், 
கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை, 
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், 
முந்திரி, திராட்சை - தலா ஒரு டேபிள்ஸ்பூன், 
கண்டென்ஸ்டு மில்க் - 2 டேபிள்ஸ்பூன், 
மேங்கோ எசன்ஸ் (விரும்பினால்) - சில துளிகள், 
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்.

செய்முறை : 

* முந்திரி, திராட்சையை சிறிது நெய்யில் சிவக்க வறுத்து எடுக்கவும். 

* மீதமுள்ள நெய்யை விட்டு அரிசிக் குருணையைப் போட்டு லேசாக வறுத்து, அதில் பாலை ஊற்றி காய்ச்சவும். 

* அரிசி நன்றாக வெந்து கண்ணாடி போல் ஆகி பால் சிறிது குறுகியதும், கண்டென்ஸ்டு மில்க், சர்க்கரை சேர்த்துக் கிளறவும். 

* பிறகு கேசரி பவுடர், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி, மாம்பழக் கூழையும் சேர்க்கவும். 

* எல்லாம் சேர்ந்து கொதித்ததும் கீழே இறக்கி, முந்திரி - திராட்சை, மேங்கோ எசன்ஸ் சேர்த்துப் பரிமாறவும்.

* சுவையான மாம்பழ பாயசம் ரெடி.

0 கருத்துகள்:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...

 
TOP