Loading...
Saturday, 23 April 2016

குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான குல்ஃபி..!!

தேவையான பொருட்கள் : 

பால் - 1 லிட்டர் (full cream milk)
சர்க்கரை - 50 கிராம்
கஸ்டர்டு பவுடர் (இல்லையென்றால் கார்ன்ஃப்ளோர்) - 3 தேக்கரண்டி
ஏலக்காய்ப்பொடி - 1 தேக்கரண்டி.
முந்திரி+பாதாம் - 100 கிராம்.
குங்குமப்பூ-பாதாம் எசன்ஸ் - 5 துளிகள்
பனைவெல்லம் (அல்லது) வெல்லம் - எலுமிச்சைஅளவு.

செய்முறை :

* ஒரு அடி கனமான பாத்திரத்தி்ல், பாலை ஊற்றி அடுப்பில் வைத்து மிதமான சூட்டில், பால் 600 மிலியாக குறையும் வரை அடிபிடிக்காமல் காய்ச்சவும்.

* பின்பு சர்க்கரையை போட்டு கரையும் வரை மேலும் 3 நிமிடங்கள் காய்ச்சவும். 

* பிறகு வெல்லத்தை போட்டு 2 நிமிடங்கள் கிளறவும்.

* கஸ்டர்டு பவுடரை கால் கிண்ணம், குளிர்ந்த நீர் சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து, கொதித்துக் கொண்டிருக்கும் பாலில் விட்டுக்கொண்டே, கை விடாமல் 3 நிமிடம் வரை கிளறவும்.

* அடுப்பை அணைத்து விட்டு ஏலக்காய்ப்பொடி, எசன்ஸ் சேர்க்கவும்.

* நன்றாக ஆறினவுடன் Freezer ல் வைக்கவும்.

* கலவை ஐஸ்(frozen) ஆனவுடன் வெளியில் எடுத்து வைக்கவும்.

* அரைமணி நேரம் கழித்து, ஐஸ்கிரீமை பெரிய மிக்சி ஜாரில் நன்றாக நுரை(bubble) வரும் வரை ஓரிரு நிமிடம் விட்டு விட்டு அரைக்கவும்.

* பாதாம்-முந்திரி பருப்புகளை சின்ன மிக்சி ஜாரில் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.

* ஐஸ்க்ரீம் உடன் பாதாம்-முந்திரி பொடி சேர்த்து, நன்றாக கலந்து திரும்பவும் குல்ஃபி கப்பில் ஊற்றி 4,5 மணி freezerல் வைத்து எடுத்தால் குல்ஃபி தயார்.

0 கருத்துகள்:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...

 
TOP