Loading...
Thursday, 28 April 2016

புதினா இறால் குழம்பு...

தினமும் சைவ உணவுகளை சாப்பிட்டு போர் அடித்தவர்கள், அவ்வப்போது அசைவ உணவுகளையும் சமைத்து சாப்பிட வேண்டும். அதிலும் இறைச்சிக்கு பதிலாக கடல் உணவுகளில் ஒன்றான இறாலை சமைத்து சாப்பிட்டால் உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

குறிப்பாக இது கோடைகாலம் என்பதால், உடலுக்கு புத்துணர்ச்சியையும், குளிர்ச்சியையும் தரும் புதினா மற்றும் கொத்தமல்லியை சேர்த்துக் கொண்டால் மிகவும் நல்லது.

எனவே இவைகள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து, ஒரு புதுவிதமான ரெசிபியான புதினா இறால் குழம்பை செய்யலாம். இவை மிகவும் சுவையுடன் இருப்பதோடு, விருந்தினர்கள் வீட்டிற்கு வந்தால், அவர்கள் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும். சரி, இப்போது அந்த புதினா இறால் குழம்பின் செய்முறையைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்: 

இறால் - 200 கிராம் 

புதினா - 1 சிறிய கட்டு (சுத்தம் செய்தது) 

கொத்தமல்லி - 1/2 கட்டு (சுத்தம் செய்தது) 

இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது) 

வெங்காயம் - 2 (நறுக்கியது) 

பூண்டு - 5 பற்கள் 

பச்சை மிளகாய் - 1-2 

சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன் 

மல்லி தூள் - 1/2 டீஸ்பூன் 

தேங்காய் பால் - 100 மி.லி 

எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன் 

உப்பு - தேவையான அளவு 

எண்ணெய் - தேவையான அளவு 

தண்ணீர் - 1 1/2 கப்

செய்முறை: இறாலை நன்கு கழுவி, அதில் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பிரட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய், சீரகப் பொடி, மல்லி பொடி, இஞ்சி, பூண்டு மற்றும் 1 வெங்காயம் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். 

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும். 

பின் அரைத்து வைத்துள்ள கலவையை ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விட்டு, தேங்காய் பாலை சேர்த்து, தீயை குறைவில் வைத்து, 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

பின்பு ஊற வைத்துள்ள இறாலை சேர்த்து, 5 நிமிடம் வேக வைத்து, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து, மீண்டும் 5 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு, இறால் வெந்ததும், தீயை அணைத்து இறக்கி விட வேண்டும். 

இப்போது சுவையான புதினா இறால் குழம்பு ரெடி!!! இதனை சாதத்துடன் சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்

0 கருத்துகள்:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...

 
TOP