Loading...
Wednesday, 27 April 2016

இயற்கை மிகுந்த சத்தான மிக்ஸ்டு வெஜிடபிள் ஜூஸ்..

தேவையானவை: 

கேரட், தக்காளி – தலா 3,
பீட்ரூட் – 1,
பாகற்காய் – சிறியது 1,
சுரைக்காய் – சிறியது 1,
முட்டைக்கோஸ் – 25 கிராம்,
இஞ்சி – மிகச் சிறிய துண்டு,
ஓமம் – அரை டீ ஸ்பூன்,
எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், மிளகுத் தூள் – அரை டீஸ்பூன்,
உப்பு, ஐஸ் கட்டிகள் – தேவையான அளவு.

செய்முறை:

 ஒரு சிறிய பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர்விட்டு, ஓமத்தை ஊறவைக்க வேண்டும். கேரட், தக்காளி, பீட்ரூட், பாகற்காய், சுரைக்காய், முட்டைகோஸ், இஞ்சி ஆகியவற்றைச் சிறிய துண்டுகளாக வெட்டி, மிக்ஸியில் அரைக்க வேண்டும்.

இதனுடன், ஓமத் தண்ணீர், எலுமிச்சைச் சாறு, மிளகுத் தூள், உப்பு சேர்த்து, மீண்டும் அரைக்க வேண்டும். தேவைப்பட்டால், ஐஸ் துண்டுகள் சேர்க்கலாம்.

பலன்கள்

* இதய நோயாளிகளுக்கு ஏற்ற ஜூஸ். சுரைக்காய் இருப்பதால், உடல்பருமன் இருப்பவர்கள், இந்த ஜூஸைக் குடிக்கலாம்.

* புற்றுநோய் வராமல் தடுக்க, இதை அருந்தலாம்.

* மலச்சிக்கல், ஜீரணக்கோளாறு உள்ளவர்கள், சளியால் அவதிப்படுபவர்கள் (ஐஸ் இல்லாமல்) இந்த ஜூஸைப் பருகலாம்.

* எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க, இந்த ஜூஸ் ஏற்றது.

0 கருத்துகள்:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...

 
TOP