Loading...
Saturday, 23 April 2016

வாட்டி வதைக்கும் கோடை வெயிலை சமாளிக்க சில டிப்ஸ்கள்...!!

இது அக்னி நட்சத்திரக் காலம். கடும் வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது.

வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்தால் மட்டுமே பலவித  நோய்கள் தாக்குதல் மற்றும் உடல் ரீதியான பாதிப்புகளிலிருந்து தப்பிக்க முடியும்.

இந்த கோடை வெயிலைச் சமாளிக்கும் வழிமுறை  தெரிந்தோருக்கு, கோடை ஒரு கொடையாக மாறிப்போகும்.

வியர்வையில் நனைந்து, உடல் உப்புச் சத்தை இழக்கிறது. உடல் வெப்ப நிலையைச் சமச்சீராக்கிப் பாதுகாக்கும் மந்திரத்தை இளநீர் செய்கிறது. 

வெயிலில் அலைய நேரிடும் போதெல்லாம் இளநீரை குடிப்பது நல்ல பலனை தரும். 

நுங்கு, வெள்ளரி, தர்ப்பூசணி உண்பது நல்லது. வெள்ளரி பிஞ்சுகளிலும், பழங்களிலும் நீர்ச்சத்துடன், கார்போ ஹைட்ரேட், புரோட்டீன், கால்சியம், தாது  உப்புகளும் அதிகமிருக்கின்றன. கிர்ணிப் பழம் உண்பதும் நல்லதே. 

கீரைகள், காய்கறிகள், பழங்கள் உணவில் அதிகம் சேர்ப்பதும், சைவ உணவும் கோடை காலத்திற்கு மிக ஏற்றது.

கிழங்கு வகைகளுடன், தேங்காய்,  நிலக்கடலை, தேன், ஜாம், நெய் உள்ளிட்ட சில உணவுப்பொருட்களை. பச்சரிசியை தவிர்த்து புழுங்கல் அரிசி சாதத்தை எடுத்துக் கொள்வதும் நலம்  தரும்.

காரமான, வறுத்த உணவுகள், உப்பு, புளிப்பு, துவர்ப்பு, கொழுப்பு குறைத்துக் கொள்ள வேண்டும்.

ஆவியில் வெந்த உணவுகள் பிரச்னை தராது. பீர்க்கை,  புடலை என நாட்டு தண்ணீர் காய்கள் உணவு நல்லது. உளுந்து, பாசிப்பருப்பு, துவரம் பருப்பு,  கோதுமை, ராகி நிறைய சேர்க்கலாம்.

கோடையில் சுத்தமான தண்ணீர் அதிகளவில் அருந்துவது அவசியம். அவரவர் உடல்நிலைக்கேற்ப சிறிது சிறிதாக எத்தனை லிட்டர் தண்ணீரையும்  இந்த கோடை காலத்தில் குடித்துக் கொண்டே இருக்கலாம்.

திராட்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு, அன்னாசி, எலுமிச்சை, தர்ப்பூசணி என அதிக நீருள்ள  பழங்களை சாப்பிடுவது உடலுக்குள் தங்கும் கோடை வெம்மையை விரட்டியடித்து, உடலை குளுகுளுப்பாக்கும்.

உஷ்ணம் குறைக்கும் வகையில்  குல்கந்து, உப்பு சேர்த்த எலுமிச்சை சாறும் அருந்தலாம். 

கோடை காலத்தில் காலை, மாலை, இரவு என கிடைக்கும் நேரத்தில் ஒன்றுக்குப் பலமுறை குளிப்பது நல்லது.

முடிந்தவரை முகம், கை, கால்களைக்  கழுவிக் கொள்வதும் வெப்ப பாதிப்பிலிருந்து நம்மைக் காக்கும்.

வெளியில் செல்வோர் தலைக்கு தொப்பி அணிவதும், கூலிங் கிளாஸ்கள் அணிவதும்  அவசியம்.

0 கருத்துகள்:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...

 
TOP