வெண்டைகாயில் பல்வேறு சத்துக்கள் உள்ளன. உடல் எடையை குறைக்கும் தன்மை கொண்டது. உஷ்ணத்தை தணிக்க கூடியது. தலைமுடிக்கு தலைசிறந்த மருந்தாகிறது. தோலுக்கு வண்ணத்தை கொடுக்க கூடியது.
ஆசனவாய் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.உணவாக பயன்படுவது மட்டுமின்றி பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட வெண்டைக்காய்யில் வைட்டமின் ஏ, பி, சி மற்றும் கார்போஹைரேட், பொட்டாசியம் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன.
வெண்டைக்காயை பயன்படுத்தி சர்க்கரை நோயாளிகளுக்கான மருந்து தயாரிக்கலாம். 3 வெண்டைக்காயை நீளவாக்கில் வெட்டி, ஒரு டம்ளர் நீரில் இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். இந்த நீரை மட்டும் எடுத்து காலையில் குடித்து வந்தால், சர்க்கரையின் அளவு குறையும்.
மலச்சிக்கலை போக்குகிறது. வெண்டைக்காயின் காம்பு எளிதில் உடைய கூடியதாக இருந்தால் அது நல்ல வெண்டைக்காய். கோடைகாலத்தில் ஏற்படும் அதிக வெப்பத்தால், சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சல், வெள்ளைப்படுதலை சரிசெய்யும் மருந்து தயாரிக்கலாம்.
4 வெண்டைக்காய்களை சிறு துண்டுகளாக்கி எடுக்கவும். இதனுடன் ஒரு ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்க்கவும். ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி காலை, மாலையில் குடித்துவர சிறுநீர்பாதையில் ஏற்படும் எரிச்சல், அழற்சி குணமாகும். வெள்ளைப்போக்கு சரியாகிறது.
வெண்டைக்காயில் உள்ள நார்ச்சத்து, புற்றுநோயை உண்டாக்கும் நச்சுக்களை வெளியேற்றுகிறது. சமையலுக்காக பயன்படும் வெண்டைக்காயின் இலைகள், காய்கள் மருந்தாகிறது.
வெண்டைக்காயை பயன்படுத்தி பொடுகை போக்கும் மருந்து தயாரிக்கலாம். வெண்டைக்காய் துண்டுகளுடன் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும்.
நன்றாக வெந்தவுடன் கொழகொழப்பு தன்மை மாறும். வடிகட்டியபின் இந்த தண்ணீரை முடியில் தேய்த்து குளிக்கும்போது முடி பளபளப்பாக இருக்கும். பொடுகுகள் இல்லாமல் போகிறது.
தலைமுடி ஆரோக்கியமாகிறது. தோலில் தேய்த்து குளித்தால் தோல் ஆரோக்கியம் அடையும். வெண்டைக்காய் எலும்புகள், கண்களுக்கு பலம் கொடுக்கிறது.
நல்ல சத்தூட்டமான உணவு. வெண்டைக்காயை சாப்பிட்டுவர உடல் எடை குறையும். ஆரோக்கியம் மேம்படும். வயது முதிர்வை தடுக்கிறது. வெண்டைக்காயை பயன்படுத்தி மலச்சிக்கலுக்கான மருந்து தயாரிக்கலாம்.
வெண்டைக்காயை வேகவைத்து பசையாக அரைக்கவும். 2 ஸ்பூன் பசையுடன் அரை ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் தனியா, சிறிது உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். இரவில் தூங்கப்போகும் முன்பு 2 ஸ்பூன் சாப்பிட்டுவர மலச்சிக்கல் சரியாகும்.
வெண்டைக்காயில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால், புற்றுநோயை போக்கும் மருந்தாகிறது. இதில் உள்ள வைட்டமின் ஏ சத்து, கண்களுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது. எலும்புகளை உறுதியாக்குகிறது.
முதுகுதண்டு, மூளைக்கு பலத்தை தருகிறது.ஞாபக சக்தியை அதிகரிக்கும் வகையில், படிக்கும் குழந்தைகளுக்கு வெண்டைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து கொடுக்கலாம். குழந்தைகள், கர்ப்பிணிகள் உண்ணக்கூடிய பாதுகாப்பான உணவாக வெண்டைக்காய் விளங்குகிறது....
0 கருத்துகள்:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...