Loading...
Sunday, 27 March 2016

கொங்கு நாட்டு மட்டன் பிரியாணி செய்யலாம் வாங்க...!!

பிரியாணில நெறைய வகை இருக்கு
ஆனா சில ஊர் பிரியாணி ரெம்ப ஸ்பெஷல் அந்த வகைல எங்க கொங்கு நாட்ல கோயம்புத்தூர் ல சில கடைங்க பிரியாணி குனே இருக்கு.

அங்கண்ணன் பிரியாணி தம்பியண்ணன் புலவு கோவை பிரியாணி இதெல்லாம் அங்கே ரெம்ப பேமஸ்
இவங்க எல்லாம் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாயாதிங்க.
நான் இப்ப அந்த கொங்கு நாட்டு செய்யற பிரியாணி முறையை உங்களுக்கு சொல்ல போறேன்

இப்ப செய்முறை பாக்கலாமா

தேவையானவை : -

பிரியாணி அரிசி (சீராக சம்பா) அரை கிலோ
மட்டன்/ சிக்கன் முக்கால் கிலோ நன்றாக கழுவி தண்ணீர் சுத்தமாக வடித்து வைக்கவும்
சின்ன வெங்காயம் பத்து
பச்சை மிளகாய் இரண்டு கீறி வைத்து கொள்ளவும்
பச்சை மிளகாய் நான்கு - அரைக்க
பூண்டு நூற்றி ஐம்பது கிராம்
இஞ்சி ஒரு பெரிய துண்டு
சோம்பு சிறிது
பட்டை ஒன்னு
தக்காளி ஒன்னு நறுக்கி கொள்ளவும்
புதினா கொஞ்சம்
கொத்தமல்லி தழை கொஞ்சம் அதிகம்
பெரிய வெங்காயம் ஒன்னு நறுக்கி கொள்ளவும்
பட்டை இரண்டு
ஏலக்காய் இரண்டு
பிரிஞ்சி இலை ஒன்று
கிராம்பு மூன்று
மல்லி மொக்கு ஒன்று
அன்னாசி மொக்கு ஒன்று
பிரியாணி கடல் பாசி பூ கொஞ்சம்
ஒரு ஸ்பூன் மிளகாய் போடி
எண்ணெய்
உப்பு
கொஞ்சம் நெய்
ஒரு சின்ன டம்ளர் தேங்காய் பால்
அரை மூடி லெமன்

செய் முறை
1.சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு. கொத்தமல்லி.

2.புதினா இவற்றை தனி தனியாக மிக்சியில் அரைத்து கொள்ளவும் மையா அரைக்க கூடாது

3.ஒன்னு ரெண்டாக அரைக்கவும் இஞ்சி சோம்பு பட்டை ஒன்றாக அரைக்கவும்

4.ஒரு சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி அதில் கழுவி தண்ணீர் வடித்து வைத்துள்ள மட்டன் /சிக்கன் துண்டுகளை ஒவ்வொன்றாக எண்ணையில் பொரித்து தனியே வைத்து கொள்ளவும்

5.இப்படி பொரித்து போடுவதால் துண்டுகள் பிரியாணியில் கரையாமல் இருக்கும்

6.பின் மீதி உள்ள எண்ணையில் அரைத்து வைத்துள்ள சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி சோம்பு கலவை, மல்லி, புதினா எல்ல வற்றையும் தனிதனிய லேசா வதக்கி குக்கர்ல போடவும்

7.பின் கீறி வைத்துள்ள மிளகாய் , நறுக்கிய பெரிய வெங்காயம் , தக்காளி ஆகியவற்றை தனி தனியே வதக்கி குக்கரில் சேர்க்கவும்

8.கடைசியாக பட்டை, கிராம்பு , ஏலக்காய் மற்ற பொருட்களையு ம போட்டு லேசா சிவக்கவும் குக்கரில் கொட்டவும்

9.பொறித்த மட்டன்/சிக்கன் துண்டங்களையும் தேவையான அளவு உப்பையும் சேர்க்கவும்
மட்டன் பிரியாணி என்றல் ஒரு ஸ்பூன் மிளகாய் பொடி சேர்கவும்

10.சிக்கன் பிரியாணிக்கு ரெண்டு பச்சை மிளகாய் சேர்த்து வைத்து கொள்ளவும்

11.குக்கரை அடுப்பில் வைத்து ஒரு கிளறு கிளறி விடவும் பின் அரிசியை களைந்து குக்கரில் போட்டு நன்றாக கிளறி விடவும்

12.ஒன்னுக்கு ரெண்டு கணக்கில் தண்ணீர் சேக்கவும் தேங்காய் பால் ஒரு டம்ளர் சேர்க்கவேண்டும் அதனால் தண்ணீர் அளவை சேர்க்கும் போது தேங்காய் பாலையும் கணக்கில் சேர்க்கவும்

13.கொஞ்சம் நெய் லெமன் ஜூஸ் சேர்த்து ஒரு தடவை கிளறி விட்டு உப்பு காரம் சரி பார்க்கவும்

14.பின் குக்கரை மூடி வேக விடவும்
குக்கரில் பிரஷர் நன்றாக வந்தவுடன் விசில் போட்டு அடுப்பை சிம் இல் வைக்கவும் ஒரு விசில் வந்ததும் அடுப்பை அனைக்கவும்.

15.சூடான சுவையான பிரியாணி தயார்
இதற்கு வெங்காயம் பச்சை மிளகாய் தக்காளி கொத்தமல்லி பொடியாக அரிந்து தயிரில் உப்பு சேர்த்து ரைத்தா ரெடி பண்ணவும்

16.இதற்க்கு தொட்டு கொள்ள மட்டன்/ சிக்கன் குழம்பு நன்றாக இருக்கும்
செய்து பார்த்து சொல்லுங்கள்

0 கருத்துகள்:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...

 
TOP