Loading...
Thursday, 17 March 2016

‘நல்ல’ எண்ணெய்-ஆரோக்கியம் மற்றும் அழகு தரும்..!!

நல்லெண்ணெயை உணவில் சேர்ப்பதால் நல்ல கொழுப்பு கிடைப்பதோடு ஆரோக்கியதுக்கு தேவையான பல்வேறு சத்துகள் உடலுக்கு கிடைக்கின்றன.

இதே எண்ணெயை குளியலுக்கும் பயன்படுத்துவது வழக்கம். நம் முன்னோர் காலந்தொட்டு பாரம்பரியமாக மேற்கொண்ட நடைமுறை வாரந்தோறும் எண்ணெய் குளியல் எடுப்பது இது ஒரு வகையான ஆயுர்வேத முறைதான்.

நல்லெண்ணெய் குளியல் மேற்கொள்ளும் போது அதில் பூண்டு, மிளகு, சீரகம் மற்றும் சுக்கு ஆகியவற்றை சேர்த்து வெதுவெதுப்பாக சூடேற்றி பின் அந்த நல்லெண்ணெயை நன்கு தேய்த்து குளிக்க வேண்டும்.

நவநாகரீகம் என்கிற பெயரில் இதையெல்லாம் மறந்ததன் விளைவால் தான் முடி உதிர்வதோடு பல்வேறு நோய் பாதிப்புகளுக்கும் ஆளாக வேண்டியுள்ளது. வாரமொரு முறை நல்லெண்ணெய் குளியல் எடுப்பதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன.

அடர்த்தியான முடி வளரும் : -

நல்லெண்ணெய் குளியலின் மூலம் மயிர் கால்களுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து முடியின் வளர்ச்சி அதிகரிப்பதோடு முடி அடர்த்தியாகவும் இருக்கும்.

உடல் சூட்டை தணிக்கும் : -

நல்லெண்ணெய் கொண்டு வாரம் ஒருமுறை தலைக்கு மஜாஜ் செய்து குளித்தால் உடலில் உள்ள அதிகப்படியான வெப்பம் வெளியேறும் உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

பொலிவான சருமம் : -

எண்ணெய் குளியல் என்று சொல்லும் போது தலைக்கு மட்டுமின்றி உடலுக்கும் நல்லெண்ணெய் தேய்த்து மஜாஜ் செய்து குளித்து வந்தால் சருமம் பொலிவோடு மென்மையாக இருக்கும். பொடுகு தொல்லையும் தீரும்.

0 கருத்துகள்:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...

 
TOP