Loading...
Wednesday, 16 March 2016

வீட்டு மனை வாங்கியப் பின்பு வில்லங்கச் சான்றிதழ் பெற வேண்டும்..!!

ஒரு வீட்டுமனையை வாங்குவதற்கு முன்னர் அந்த நிலத்தின் உரிமையாளர் யார், அவர் அந்த உரிமையை யாரிடமிருந்து பெற்றார், அந்தச் சொத்து வேறு யாரிடமாவது அடமானத்தில் உள்ளதா, வேறு யாருக்கும் விற்கப்பட்டு உள்ளதா என்ற விவரங்களை வில்லங்கச் சான்றுகள் மூலமாக சரிபார்ப்பது வழக்கம்.

பொதுவாக பதினைந்து ஆண்டுகளில் இருந்து முப்பது ஆண்டுகள் வரையிலும் வில்லங்கச் சான்று சரிபார்க்கப்படுகிறது.  

வீட்டுமனை வாங்குவதோடு வில்லங்க சான்றின் பணி முடிவடைந்து விடுவதில்லை. கிரயப் பத்திரத்தை பதிவு செய்தபிறகு, சில வாரங்கள் கழித்து மீண்டும் ஒருதடவை வில்லங்கச் சான்று பெறுவது நல்லது.

உங்களுக்கு கிரயம் செய்யப்பட்ட நிலம் உங்களை அடுத்து வேறு யாருக்காவது விற்பனை செய்யப்பட்டுள்ளதா அல்லது அடமானம் வைக்கப்பட்டுள்ளதா என்று சரிபார்த்துக்கொள்ள இது உதவும்.

வீட்டுக்கடன் வழங்குகிற சில வங்கிகள் இப்படி இடத்தை வாங்கிய பிறகும் வில்லங்கச்சான்று பெறுவதை கட்டாயமாக்கி உள்ளன.

கடன் வாங்கா விட்டாலும் வில்லங்கச்சான்று பெற்று வீட்டுமனையின் உரிமையை சரி பார்த்துக் கொள்வது பாதுகாப்பானது.

0 கருத்துகள்:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...

 
TOP