வாழைப்பூவில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன.
முக்கியமாக மலட்டுத்தன்மையை போக்கும்தன்மை அதில் இருக்கிறது. உடலுக்கு பலத்தை கொடுத்து, இனப்பெருக்கத் திறனை மேம்படுத்தும்.
வாழைப்பூ துவர்ப்பு சுவையுடையது. இந்த சுவை ரத்தத்தை சுத்தம் செய்யும் தன்மையுடையது. உடலில் உள்ள புண்களை ஆற்றி நரம்புகளுக்கு சக்தியளிக்கும் ஆற்றலும் இதில் இருக்கிறது. வாழைப்பூவை உணவில் சேர்த்துவந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
சர்க்கரை நோயாளிகள் வாரம் ஒரு முறை உணவில் வாழைப்பூவை சேர்த்துக்கொள்ளவேண்டும்.
அதனை சமைத்து சாப்பிட்டால் சர்க்கரை நோயாளிகளின் நரம்புகள் வலிமையடையும். கை, கால், பாதங்களில் உண்டாகும் குத்தல் மற்றும் எரிச்சல் நீங்கும். வாழைப்பூவில் இருக்கும் நார்ச்சத்து உடலில் உள்ள சர்க்கரையின் அளவையும் குறைக்க உதவும்.
இன்றைய உணவு பழக்கத்தால் வயிற்றில் புண்கள் உண்டாகின்றன. மலச்சிக்கல் உருவாகி மூலநோயும் தோன்றுகின்றன. மூல நோயால் பாதிக்கப்படும்போது, மலத்துடன் ரத்தம் வெளியேறும். உள்மூலம், வெளி மூலம் மற்றும் மலக்குடல் புண்களால் அவதிப்படுகிறவர்கள், வாழைப்பூவை சமைத்து சாப்பிடவேண்டும்.
உடல் சூடு காரணமாக உண்டாகும் வயிற்றுக் கடுப்பு, சீதபேதி மற்றும் தொடர் இருமலுக்கும் வாழைப்பூ சிறந்த மருந்து.
பெண்களுக்கு வாழைப்பூ ஒரு வரப்பிரசாதம். மாதவிலக்கு காலங்களில் உண்டாகும் அதிக உதிரப்போக்கிற்கு வாழைப்பூவின் உள்ளே இருக்கும் வெண்மையான பாகத்தை எடுத்து, அரைத்து 100 மி.லி. நீரில் கலந்து வடிகட்டவேண்டும். அதில் தேவைக்கு பனங்கற்கண்டு கலந்து அருந்தினால், உதிரப்போக்கு கட்டுப்படும். உடல் அசதி, வயிற்று வலி, சூதக வலி போன்றவைகளும் குறையும்.
வெள்ளைப் படுதலுக்கும் இதுபோன்று தயாரித்து பருகவேண்டும்.
குழந்தைப் பேறினை எதிர்பார்க்கும் தம்பதிகள் வாரத்தில் ஒருநாள் வாழைப்பூவை உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
வாழைப்பூவில் உள்ள தடிப்பான நரம்பை நீக்கிவிட்டு மீதமுள்ள பாகங்களை நறுக்கி சமைக்கவேண்டும்.
வாழைப்பூ வேகுவதற்கு சற்று அதிக நேரமாகும். பெரும்பாலான குடும்பங்களில் அவசர கதியில் உணவு தயாரிப்பதால், அதனை சமைத்து உணவில் சேர்க்காமலே விட்டு விடுகிறார்கள்.
அதனால் மருத்துவ குணமிக்க வாழைப்பூவின் சக்தி அவர்களுக்கு கிடைக்காமலே போய்விடுகிறது. நீங்கள் அவசர சமையல் மேற்கொள்பவராக இருந்தாலும் வாரத்தில் ஒருமுறையாவது சமைத்து அதனை சாப்பிடுங்கள். சிறுவயதில் இருந்தே குழந்தைகளையும் வாழைப்பூ பதார்த்தங்களை சாப்பிட பழக்கப்படுத்துங்கள். இதை சாப்பிட்டால் குழந்தைகள் நோய் எதிர்ப்பு சக்திமிக்கவர்களாக திகழ்வார்கள்.
0 கருத்துகள்:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...