Loading...
Sunday, 6 March 2016

மூக்கடைப்பு பிரச்சனைக்கு தீர்வு தரும் எளிய மருத்துவம்..!!


பொதுவாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அவதிப்படும் ஓர் விஷயம் ஜலதோஷத்தின் போது ஏற்படும் மூக்கடைப்பு.

இதை சரிசெய்ய உப்பு மருந்தாக விளங்குகிறது.

தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து வெதுவெதுப்பாக இருக்கும் நிலையில் சிறிது உப்பை போட்டு, அதை நன்கு கலக்கி கொள்ளவும்.

பின்பு அதனை மூக்கின் அருகில் வைத்து ஆழமாக உறிஞ்ச வேண்டும். அந்த நீரவி மூக்கினுள் பரவ வேண்டும்.

இதன் மூலம் மூக்கடைப்பு எளிதாக நீங்குவதுடன், ஜலதோஷத்தை கட்டுப்படுத்த முடியும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து இறக்கவும். அதை தட்டு போட்டு மூடி விடவும். ஆவி பிடிக்கும் போது அதில் நீலகிரி தைலம் 2 சொட்டு ஊற்றி ஆவி பிடிக்க வேண்டும். இதனை 2 நாட்கள்  தொடர்ந்து செய்து வந்தால் மூக்கடைப்பு, சளி தொல்லை நல்ல தீர்வு காணலாம். 

0 கருத்துகள்:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...

 
TOP