Loading...
Saturday, 5 March 2016

ருசியான குலாப் ஜாமூன் செய்வது எப்படி..!!


தேவையான பொருட்கள்

பால்  – தேவைக்கேற்ப
சர்க்கரை  –  2  கப்
பால் பவுடர்  –  1   கப்
மைதா  –  1 / 2  கப்
சமையல் சோடா   – 1 / 2 தேக்கரண்டி
உருக்கிய வெண்ணெய்  –  2 மேசைக்கரண்டி
எண்ணெய்  – பொரிப்பதற்கு
சர்க்கரை பாகு செய்வதற்கு
தண்ணீர்   –  1  கப்
ஏலக்காய்  –  2

செய்முறை

சர்க்கரை பாகு

மேலே கொடுத்துள்ள பொருட்களை  ஒன்றாகக் கலந்து  சர்க்கரை நன்றாக தண்ணீரில் கரையும் வரை சூடு செய்யவும்.

ஜாமுன்

ஒரு பாத்திரத்தில் பால் பவுடர், மைதா, சமையல் சோடா, வெண்ணெய் எல்லாவற்றையும் ஒன்றாக கலக்கவும்
.
இதில் தேவையான அளவு பால் ஊற்றி லூசாக பிசைந்து கொள்ளவும்.பிசைந்த உருண்டையை  சிறிது நேரம் அப்படியே வைக்கவும்.

உருண்டையை 18  – 20 பாகங்களாகப் பிரித்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

கடாயில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் சூடு செய்யவும்.

எண்ணெய் சூடானதும் அதில் உருண்டைகளைப் போட்டு பொரித்து எடுக்கவும்.

அடுப்பை மிதமான சூட்டில் வைக்க வேண்டும்.குலாப் ஜாமுன் மெதுவாக அடியிலிருந்து மேலே வர வேண்டும்.

பொன்னிறமானதும் மெதுவாக வெளியே எடுத்து மிதமான சூட்டில் இருக்கும் சர்க்கரைப் பாகில் போடவும்.

குலாப் ஜாமுனை 30 நிமிடங்கள் சர்க்கரைப் பாகிலையே விட்டு விடவும்.பிறகு எடுத்து பரிமாறலாம்

1 கருத்துகள்:

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...

 
TOP