Loading...
Friday, 25 March 2016

சுரைக்காய் சப்ஜி செய்வது எப்படி...!!


தேவையான பொருட்கள்: 

சுரைக்காய் – கால் கிலோ, 

வெங்காயம் – 1, 

தக்காளி – 2, 

இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், 

மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், 

மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, 

தனியாத் தூள் – ஒன்றரை டீஸ்பூன், 

கடலை மாவு – 2 டீஸ்பூன், 

உப்பு – ருசிக்கேற்ப. 

தாளிக்க: 

நெய் – ஒரு டீஸ்பூன், 

கடுகு, சீரகம் – அரை டீஸ்பூன், 

கறிவேப்பிலை – சிறிதளவு.

செய்முறை: 

* சுரைக்காய், வெங்காயம், தக்காளியை நறுக்கிக்கொள்ளவும். 

* இதனுடன், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள் தனியாத் தூள், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து ஒரு பாத்திரத்தில் வேகவிடவும். குக்கரில் வைத்தால் ஒரு விசில் போதும். 

* வெந்ததும், உப்பு சேர்த்து, கடலை மாவைக் கரைத்து ஊற்றிக் கொதிக்கவிடவும். சேர்ந்தாற்போல வரும்போது இறக்கிவிடவும். 

* நெய்யில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டிக் கிளறிவிடவும். சப்பாத்தி, நான் போன்ற சிற்றுண்டிகளுக்கு சிறந்த சைட் டிஷ் இது.

குறிப்பு:

எல்லாக் காய்களிலும் இதே முறையில் சப்ஜி செய்யலாம்.

பலன்கள்:

வயிற்று உப்புசம் நீங்கும். வயிறு மற்றும் குடலில் ஏற்படக் கூடிய நச்சுக்களை முழுமையாக நீக்குவதால், அந்த உறுப்புகளில் ஏற்படக்கூடிய நோய்களை (குடல் புற்று போன்றவை), வரும் முன்னரே தடுக்கும். சிறுநீர் வெளியேறும்போது எரிச்சல், தூக்கமின்மை சரியாகும்.

0 கருத்துகள்:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...

 
TOP