பொதுவாக வீட்டில் தரை, பாத்திரங்கள், துணிகள் போன்றவற்றை அடிக்கடி சுத்தம் செய்வது போல அன்றாடம் நாம் பயன்படுத்தும் மற்ற சில பொருட்களையும் எப்போதும் நாம் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
அதன் மூலம் கிருமிகளால் பரவும் பல நோய்களில் இருந்து நாம் நம்மை காத்துக்கொள்ள முடியும்.
1. கால் மிதியடிகள் : கால் மிதியடிகளை அவ்வபோது அலசி வெயிலில் உலரவிட வேண்டும்.
2. கதவுகளின் கைப்பிடிகள்: கதவுகளின் கைப்பிடிகள் அதிலும் குறிப்பாக கழிவறைக் கதவுகளில் உள்ள கைப்பிடிகளில் கிருமிகள் மிகுந்து இருக்கும். எனவே, பீரோ, பிரிட்ஜ் மற்றும் அறைக் கதவுகளின் கைப்பிடியை அவ்வப்போது சுத்தப்படுத்த வேண்டும்.
3. டிவி ரிமோட் : வீட்டில் அனைவரும் பயன்படுத்தும் ஒரு பொருள் என்றால் அது டி.வி ரிமோட்தான். எனவே, அதனை உலர்வான துணியைக் கொண்டு அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்,
4 .வீட்டை சுத்தப்படுத்தும் மாப்: இதைப் பயன்படுத்தியதும் அப்படியே எடுத்து உலர வைத்துவிடாமல், பயன்படுத்திய பிறகு, சோப்பு தண்ணீரில் நன்கு துவைத்து பிறகு சுத்தமான நீரில் அலசி வெயிலில் உலர வையுங்கள்.
5. வாளி மற்றும் குவளை : வீட்டில் குளிக்கப் பயன்படுத்தும் வாளி மற்றும் குவளைகளை அடிக்கடி நன்கு தேய்த்து சுத்தப்படுத்தி சூரிய வெளிச்சத்தில் காய வைப்பது மிகவும் அவசியம்.
0 கருத்துகள்:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...