Loading...
Thursday, 24 March 2016

2 வயது முதல் 10 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு என்ன உணவு கொடுக்கலாம்..??

காலை
7 மணி:

அரை டீஸ்பூன் சர்க்கரை சேர்த்த ஒன்றரை கப் பால் / சத்து மாவுக் கஞ்சி ஒரு கப்.

8 மணி:

2 இட்லி / ஒரு தோசை. இதனுடன் சட்னி, சாம்பார். முடிந்தவரை தேங்காய் சட்னியைத் தவிர்க்கலாம். பூரி மசாலா - 2 / பொங்கல் - 150 கிராம் / உப்புமா - 150 கிராம். தினசரி இவற்றில் ஏதாவது ஒன்றைச் சாப்பிடலாம்.

11 மணி:

ஒரு ஆப்பிள். அல்லது சிறிது அளவு பழ சாலட்.

12 மணி :

காய்கறி சூப் - ஒரு கப்.

மதியம்
1 மணி :

பின் வருபவனவற்றில் ஏதாவது ஒன்று 200 கிராம்.

நெய் சேர்த்த பருப்பு சாதம் / பருப்பு சேர்த்த கூட்டு சாதம் / சாம்பார் சாதம் / தயிர் சாதம். இதனுடன், 150 முதல் 200 கிராம் அளவுக்குப் பொரியல். ஏதேனும் ஒரு கீரை - ஒரு கப். அசைவம் சாப்பிடுபவர்கள், ஒரு வேக வைத்த முட்டை அல்லது ஆம்லெட். வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு வேகவைத்த கோழி இறைச்சி 50 கிராம் அல்லது குழம்பில் போட்ட மீன் துண்டு கொடுக்கலாம்.

(குறிப்பு: சாம்பார் சாதம் கொடுக்கும்போது, முந்திரி, வேர்க்கடலை சேர்த்துத் தரலாம். தயிர் சாதத்தில் திராட்சை, முந்திரி, உலர் பழங்கள், மாதுளை முத்துக்கள் சேர்த்துக் கொடுக்கலாம். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.)

மாலை
4 மணி: பால், சுண்டல் அல்லது பயறு வகைகள் - 50 கிராம்

6 மணி: ஒரு கப் பால்.

இரவு
8 மணி: காலை டிஃபன் அல்லது மதிய உணவு போல் சாப்பிடலாம். 

10 மணி : ஒரு வாழைப் பழம்
உடல் வலுவில்லாமல், புரதச் சத்து குறைவாக இருக்கும் குழந்தைகளுக்கு டாக்டரின் பரிந்துரையின்பேரில் புரோட்டீன் பவுடர் 2 டீஸ்பூன் பாலுடன் சேர்த்துக் கொடுக்கலாம்.

0 கருத்துகள்:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...

 
TOP