சென்னை, மார்ச்.8-
சென்னை மாவட்டத்தில் 16 சட்டமன்ற தொகுதிகளுக்கு வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி, சென்னையில் 39 லட்சத்து 47 ஆயிரத்து 16 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 19 லட்சத்து 62 ஆயிரத்து 414 பேர் ஆண்கள். 19 லட்சத்து 83 ஆயிரத்து 766 பேர் பெண்கள். 836 பேர் இதர வாக்காளர்கள் ஆவார்கள்.
இந்த எண்ணிக்கை கடந்தாண்டு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்த வாக்காளர் எண்ணிக்கையை விட, 1 லட்சத்து 18 ஆயிரத்து 243 வாக்காளர்கள் கூடுதல் (3.09 சதவீதம்) ஆகும். இந்த நிலையில் இளம் வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில் சென்னையில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. அந்தந்த மண்டல அலுவலகங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதின் தொடர்ச்சியாக தற்போது வாக்காளர் பட்டியல் தொடர் திருத்த பணி நடைபெறுகிறது. 18 வயது நிரம்பிய கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ள ஏதுவாக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி மாவட்ட தேர்தல் அலுவலகம் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் கல்லூரிகளில் வாக்காளர் பெயர் சேர்ப்புக்கான சிறப்பு முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலக அதிகாரிகள் கூறியதாவது:-
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் திருத்தம் செய்வதற்காக அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. வாக்காளர் பட்டியல் தெரிவு செய்வதற்கான 16 அம்ச சிறப்பு கோட்பாடுகள் சென்னை மாநகராட்சி மண்டல அதிகாரிகளுக்கு, தேர்தல் ஆணையம் மூலம் அனுப்பப்பட்டது.
அதில், அனைத்து கல்லூரிகளிலும் ‘ஆன்-லைன்’ மூலம் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சேர்க்க மாணவ-மாணவிகளுக்கு ஏற்பாடு செய்து தரவேண்டும் என்பது உள்பட 16 அம்சம் இடம்பெற்றுள்ளன. இந்த அறிவிப்பு வெளியானபோதே நகரில் உள்ள பல கல்லூரிகளில் இந்த முகாம்கள் நடத்தப்பட்டன. மேலும், முகாம்கள் மூலம் வண்ண வாக்காளர் அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டன.
இந்த சூழ்நிலையில் புதிய வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில் கல்லூரிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இந்த முகாம்களில் 18 வயது நிரம்பிய கல்லூரி மாணவ-மாணவிகள் மட்டும் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம். இதற்காக மாவட்ட தேர்தல் அலுவலகம் மூலம் சம்பந்தப்பட்ட கல்லூரிகளின் முதல்வர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.
எல்லா ஏற்பாடுகளும் செய்த பின்னர், நடைபெறும் இந்த சிறப்பு முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்புக்கான படிவம்-6-ஐ மாணவ-மாணவிகள் ‘ஆன்-லைன்’ மூலமாக பதிவு செய்ய மாவட்ட தேர்தல் அலுவலர்கள், கல்லூரி பேராசிரியர்கள் உதவி செய்வர். இந்த முகாம்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) செயல்பட வாய்ப்பு அதிகம். 11-ந் தேதி வரை இந்த முகாம்கள் நடைபெற உள்ளது. எனவே இந்த வாய்ப்பினை மாணவ-மாணவிகள் பயன்படுத்தி கொள்ளலாம்...
- மாலை மலர்
0 கருத்துகள்:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...