Loading...
Monday, 20 June 2016

விவாகரத்துக்கு காரணமாக இருக்கும் பெட்ரூம் பிரச்சனைகள்..!!

ஆணோ பெண்ணோ, அவர்கள் செக்ஸ் வாழ்க்கையில் திருப்தி அடைந்தால் தான் அவர்கள் திருமண வாழ்வு மட்டுமின்றி மொத்த வாழ்வும் மகிழ்வுடன் சிறப்பாக அமைகிறது.

இன்று நமது சமூகத்தில் "செக்ஸ்" பிரச்சினைகளை வெளிப்படையாக பேச இயலாத நிலையில் மறைக்கக் கூடிய ஒரு பிரச்சனையாக, ஆண்களுக்கும் பெண்களுக்கும் உள்ளது, ஆணோ பெண்ணோ, அவர்கள் செக்ஸ் வாழ்க்கையில் திருப்தி அடைந்தால் தான் அவர்கள் திருமண வாழ்வு மட்டுமின்றி மொத்த வாழ்வும் மகிழ்வுடன் சிறப்பாக அமைகிறது.

பல செக்ஸ் பிரச்சினைகளை கண்டறிந்து முறையான மருத்துவம் மேற்கொண்டாலே போதுமானது. செக்ஸில் ஆண் பெண் இருவருக்கும் பொதுவான பிரச்சினைகள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம். 

செக்ஸில் ஏற்படும் முழு திருப்தியின்மையினால் கூட மனநோய்கள் உண்டாகின்றன. மனநோயும் செக்ஸ் குறைபாடும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையது.

உடல் உறுப்புகளில் ஏற்படும் மாற்றங்கள் கூட செக்ஸ் குறைபாடுகளை உண்டாக்குகின்றன. இரத்தகுழாய் சம்பந்தப்பட்ட நோய்கள், நாளமில்லா சுரப்பிகளின் குறைபாடுகளினால் உண்டாகும் குறைகள், தைராய்டு சுரப்பு குறைவதால் வரும் பாதிப்புகள், ஆண், பெண் ஹார்மோன் சுரப்பிகளின் குறைபாடுகள் முதலியன முக்கிய காரணங்கள். சிறுநீரக கோளாறுகள் மற்றும் இரத்தசோகை போன்ற வியாதிகளினால் செக்ஸ் குறைபாடுகள் ஏற்படுகிறது.

சர்க்கரை நோய் செக்ஸ் குறைபாட்டிற்க்கு முக்கிய காரணம். சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டிற்க்குள் வைத்திருக்க வேண்டும்.

செக்ஸ் பிரச்சினைகள் என்றாலே ஆண்களுக்கு மட்டும் தான்; அதுவும் ஆண்மைக் குறைவு மட்டும்தான் என நம்பப்படுகிறது. ஆனால் ஆண்மைக்குறைவு என்பது ஆணுக்கு செக்ஸில் உண்டாகும் குறைபாடுதான். இதில் உண்டாகும் குறைகள் 3 வகையாக உள்ளன.

குடிபோதை மயக்கம் மீளமுடியாமை போல் இது ஒரு செக்ஸ் அடிமைத்தனம், எந்நேரமும் அதைப்பற்றியே சிந்தித்தல். சொந்த வேலைகளைக் கூட அன்றாடம் செய்ய முடியாமல் சிரமப்படுதல். இது இருபாலருக்கும் பொதுவானது.

பொதுவாக செக்ஸ் உணர்வு சிலருக்கு மிகக் குறைவாகவும், இல்லாத நிலையும் இருக்கும். சிலருக்கு மிக அதிகமாக இருக்கும். ஆணுக்கு செக்ஸ் உணர்வு அதிகமாக உள்ள நிலை Satyriasis - சட்டைரியாஸிஸ் எனப்படும். பெண்ணுக்கு அதிகமாகயிருத்தல் : "Nymphomania" - நிம்போ மேனியா, எனப்படும்.

பொதுவாக ஆண்மைக்குறைவைப் போலவே பெண்மைக்குறைவு ஏற்படுகிறது. ஆனால் பெண்கள் அதனை வெளிப்படுத்துவதில்லை, பெரிதுபடுத்துவதில்லை. இதனால் பெண்மையில் ஏற்படும் பிரச்சனைகளை சமூகமும் பெண்களும் பெரிதுபடுத்துவதில்லை.

பொதுவாக பெண்களையும் Inhibites Orgasm (செக்ஸ் உணர்வு உன்னத நிலை, இல்லாதிருத்தல்), Sexual Addiction, Sex Arousal Disorder, Dyspareunia போன்ற பிரச்சனைகள் பாதிக்கலாம்,

நிறைய விவாகரத்துகளுக்கு (Divorce) காரணம் செக்ஸ் பிரச்சனை தான், முதலில் தங்களுக்கு செக்ஸ் பிரச்சினை உள்ளது என்பதை அறிந்து கொள்ள வேண்டும், பின் இந்த பிரச்சினைகளுக்கு தகுந்த மருத்துவர்களை அணுகி மருத்துவம் செய்தால் பிரச்சினைகள் தீரும்.

0 கருத்துகள்:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...

 
TOP