Loading...
Sunday, 1 May 2016

வீட்டிலேயே சுவையான பீட்ஸா ( Pizza ) தயாரிக்கலாம் வாங்க...

தேவையான பொருள்கள்:

பிஸ்ஸா பேஸ் – 4
டொமேட்டோ கெட்சப் – தேவையான அளவு ரெட் சில்லி சாஸ் – ஒரு டீஸ்பூன்
வெங்காயம் – 2
தக்காளி – 3
எண்ணெய் – தேவைக்கு
மிளகாய்தூள் – ஒரு டீஸ்பூன்
உப்பு – சுவைக்கு
சீஸ் – 200 கிராம்
க்யூப்சீஸ் – ஒன்று
பனீர் – 200 கிராம்
குடைமிளகாய் – ஒன்று
மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன்

செய்முறை:

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

குடைமிளகாயை நீளமாக நறுக்கிக் கொள்ளவும். பனீரை சிறு சதுரத்துண்டுகளாக நறுக்கி எண்ணெயில் பொரித்து குளிர்ந்த நீரில் போட்டு ஊற விடவும்.

பிஸ்ஸாவிற்கு செடார் சீஸ் உபயோகித்தால் தான் நன்கு உருகி நல்ல சுவை கிடைக்கும். இந்த சீஸை கேரட் துருவியால் துருவிக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கின வெங்காயம், தக்காளியை போட்டு நன்கு வதக்கவும்.

அதனுடன் சில்லி சாஸ் மற்றும் சீஸ் க்யூபை சேர்த்து கிளறி விடவும்.

பின்னர் மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறி விட்டு, ஊற வைத்திருக்கும் பனீர் துண்டுகளையும் சேர்த்து கிளறவும். கிரேவி நன்கு திக்காக இருக்க வேண்டும்.

முதலில் பிஸ்ஸா பேஸில் டொமேட்டோ கெட்சப்பை பரவலாக தடவும்.

அதன் மேல் செய்து வைத்திருக்கும் பனீர் கிரேவியை பரவலாக வைத்து நறுக்கிய குடை மிளகாயை இடைவெளி விட்டு வைக்கவும்.

அதன் மீது சீஸ் துருவலை இடைவெளியில்லாமல் தூவி விடவும். அப்போது தான் சீஸ் உருகி நல்ல சுவை தரும்.

பிறகு கடைசியாக ஒரு பின்ச் மிளகுபவுடரை மேலே தூவி விட்டு மைக்ரோவேவில் 2 – 4 நிமிடங்கள் வைக்கவும்.

4 நிமிடங்கள் கழித்து எடுத்தால் தான் சீஸ் நன்கு பரவலாக உருகி அதிக சுவையாக இருக்கும்.

சுவையான பிஸ்ஸா ரெடி. இதில் மேலே வைக்கும் டாப்பிங் நமது விருப்பதிற்கு ஏற்றாற்போல் சிக்கன், மட்டன், மஸ்ரூம் போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.

0 கருத்துகள்:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...

 
TOP