Loading...
Wednesday, 11 May 2016

ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம் தயாரிக்கலாம் வாங்க...

தேவையான பொருட்கள் :

ஸ்ட்ராபெர்ரி – 1 கப்,
பால் – 1/4 கப்,
கன்டென்ஸ்டு மில்க் – 1/2 கப்,
ஃப்ரெஷ் க்ரீம் – 1 கப்,
லெமன் ஜூஸ் – 1 டீஸ்பூன்,
சர்க்கரை – 1/4 கப்,
உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை :

ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் ஃப்ரெஷ் க்ரீம் சேர்க்கவும். ஒரு வைப்பரால் சாஃப்டான க்ரீம் ஆகும் வரை நன்கு அடிக்கவும். மிக்ஸியில் ஸ்ட்ராபெர்ரி பழத்தைப் போட்டு 3/4
பல்ப் (கூழ்) பதத்துக்கு அடிக்கவும்.

பிறகு ஃப்ரெஷ் க்ரீம் கலவை, கன்டென்ஸ்டு மில்க், லெமன் ஜூஸ், பால், சர்க்கரை மற்றும் ஸ்ட்ராபெர்ரி பல்ப் அனைத்தையும் ஒன்றாகச் சேர்க்கவும். உப்பு சேர்க்கவும்.

அதை ஃப்ரிஜ்ஜில் 1 மணி நேரம் வைத்து எடுக்கவும். பிறகு எடுத்து ஸ்பூனால் நன்கு கலக்கவும். இதை 7-8 மணி நேரம் ஃப்ரிஜ்ஜில் மறுபடியும் வைக்கவும். பின் பரிமாறவும்.

0 கருத்துகள்:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...

 
TOP