Loading...
Thursday, 14 April 2016

விளையாடும் பொழுது காயம் ஏற்பட்டுவிட்டதா..!!

'முதுலுதவி' என்பது ஆபத்தான நிலையில் (உடல்நிலை சரியில்லாமல் அல்லது காயம்பட்டு) இருப்பவருக்கு விரைவாக மற்றும் சரியான முறையில் மருத்துவ உதவி அளிப்பது.

ஆபத்தான நிலையில் இருக்கும் ஒருவருக்கு, அவருடைய உயிரை காப்பாற்ற அப்பொழுது அவருக்கு என்ன கொடுக்க வேண்டும்,

என்ன கொடுக்கக்கூடாது என்பதை அறிந்து சமயோசிதமாக செயல்பட வேண்டும்.விளையாடும் பொழுது ஏற்படும் காயங்களுக்கு எவ்வாறு முதலுதவி செய்ய வேண்டும்?

1. மைதானம் மற்றும் இதர இடங்களில் விளையாடும் பொழுது சுளுக்கு, ரத்தப்போக்கு மற்றும் மூட்டு காயங்கள் ஏற்படும்.

2. இதுபோன்று பாதிப்புகள் ஏற்படும்பொழுது, பாதிக்கப்பட்டவரை இழுக்கவோ அல்லது நகர்த்தவோ செய்ய வேண்டாம். ஸ்ட்ரச்சரில் வைத்து தேவையான இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

3. ரத்தப்போக்கு அல்லது ரத்தக்கசிவு ஏற்பட்டவருக்கு சீக்கிரம் சிகிச்சை அளிக்க வேண்டும். உடனடியாக, ரத்த கசிவை நிறுத்த முதலுதவி பெட்டியில் இருக்கும் கட்டும் துணி மற்றும் பஞ்சு வைத்து அடிப்பட்ட இடத்தை சுத்தம் செய்ய வேண்டும்.

4. காயம்பட்டவருக்கு தண்ணீர் கொடுக்கக்கூடாது. இக்கட்டான நேரத்தில் தேவையை உணர்ந்து கொஞ்சம் தண்ணீர் கொடுக்கலாம்.

0 கருத்துகள்:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...

 
TOP