கேஸ் சர்வீஸ் 2 வருடங்களுக்கு ஒரு முறை டியூபை மாற்றுவது சிறந்தது. சிலர் வருடத்துக்கு ஒரு முறை மாற்ற வேண்டும் என்பார்கள். அது தேவையற்றது.
முறையாகப் பராமரித்தால் கேஸ் டியூபானது 5 வருடங்கள் வரை கூட நன்றாக இருக்கும். டியூப் மாற்ற வேண்டும் என்பதை அதன் வாய்ப்பகுதியை வைத்துத் தெரிந்துகொள்ளலாம்.
அடுப்புடன் இணைக்கிற இடத்தில் அதன் வாய்ப்பகுதி விரிந்திருந்தால் டியூபை உடனே மாற்ற வேண்டும்.
சிலர் உடனடியாக மாற்ற வசதி இல்லை என்கிற நிலையில், டியூபையும் அடுப்பையும் இணைக்கிற இடத்தில் தற்காலிகமாக ஒரு கிளாம்ப் போட்டுக் கொள்வார்கள்.
அப்போது இன்னும் 6 மாதங்களுக்கு அந்த டியூபை வைத்து சமாளிக்கலாம்.
மற்றபடி இப்போதெல்லாம் டியூபை எலி கடித்தால்கூட எலியின் பல் உடைகிற மாதிரி ஸ்ட்ராங்காகத்தான் வருகிறது என்பதால் அதில் ஓட்டை விழக்கூட வாய்ப்பில்லை.
பொதுவாகவே கேஸ் அடுப்பை பிரச்னை வந்தால் மட்டுமே பழுது பார்க்கிற பழக்கம்தான் பலருக்கும் இருக்கிறது.
அதைத் தவிர்த்து 6 மாதங்களுக்கு ஒரு முறை சர்வீஸ் செய்தாலே சின்ன பிரச்னை இருந்தால்கூட ஆரம்பத்திலேயே சரி செய்து விடலாம்...
0 கருத்துகள்:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...