Loading...
Friday, 15 April 2016

பாகற்காயின் பலன்கள் ..!!

நாம் அன்றாடம் சாப்பிடும் காய்கறிகளிலேயே பல நன்மைகள் ஒளிந்திருக்கின்றன. அந்த வகையில், பாகற்காயை ஒதுக்காமல் இருப்பது நல்ல பலன் தரும். நம் உடலில் உள்ள புழுக்கள் அழிந்து, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க இயற்கை அளித்த அருமையான காய் தான் பாகற்காய்.
பாகற்காயின் பலன்கள் மேலும் நீளுகின்றன. அவை பற்றி.....

1.பாகல் இலையின் சாறு ஓர் அவுன்சில் சிறிது வறுத்து பொடித்து சீரகத் தூளைக் கலந்து காலை, மாலை இருண்டு வேளையும் உட்கொண்டால் விஷ ஜீரம் நின்று விடும்.

2.பாகல் இலையை அரைத்து உடம்பெல்லாம் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிக்க வேண்டும். இவ்வண்ணம் மூன்று நாட்கள் செய்து வந்தால் போதும், பூச்சிக்கடி விஷம் உடம்பில் ஏறாது.

3.பாகல் இலைச் சாற்றில் காசிக் கட்டியை உரைத்து சிரங்கின் மேல் தடிப்பாகத் தடவி வந்தால் ரத்தம் சுதம்மாகி, சிரங்கு உதிந்து விடும்.

4.ஒரு பிடி கொடுப்பாகல் இலையுடன் ஐந்தாறு மிளகைச் சேர்த்து, சுத்தமான அம்மியில் அரைத்து கண்களைச் சுற்றிப் பற்றுப் போட்டு வர கண்களுக்கு நன்மை அளிக்கும்.

5.பாகல் இலைச் சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுத்தால், அத்துடன் விஷப்பூச்சிக் கடி விஷம் நீங்கும்.

6.பாகல் இலைச் சாற்றை ஓர் அவுன்ஸ் எடுத்து அதில் அரை அவுன்ஸ் நல்லெண்ணையைக் கலந்து உட்கொண்டால் காலரா நோய் கட்டுப்படும்.

7.நீரிழிவுக்குக் குணம் தெரியும் வரை ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றில் உளுந்து அளவு பெருங்காயப் பொடியைக் கலந்து சாப்பிடு வர வேண்டும்.

8.ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றுடன் சம அளவு ஆட்டுப்பால் அல்லது பசுவின் மோர் கலந்து மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வருவது காசநோயை கட்டுப்படுத்தும்.

9.சிறுநீரகக் கற்களுக்கும், ஜீரத்துக்கும், குடல் புண், வாயுத் தொல்லைகளுக்கும் பாகல் மருந்தாகிறது.

10.பாகல் இலையைக் கொதிக்க வைத்து, சாறு எடுத்து கல்லீரல் உபாதைக்கும் பயன்படுத்துகிறார்கள்.

11.சர்க்கரை வியாதிக்கு மருந்தாக, முற்றிய பாகற்காய் பயன்படுகிறது.

12.பாகல் பழம் சத்து அளிக்கிறது, மாதவிடாய் ஒழுங்கின்மையை சரிப்படுத்தவும் உதவுகிறது.

12.உடலில்  கட்டி, புண்கள் இருந்தால் ஒரு கப் பாகற்காய் 'சூப்' எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட, மூன்று மாதங்களுக்குள் ரத்தம் சுத்தமாகி தோல் பளபளப்பாகி விடும்.

0 கருத்துகள்:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...

 
TOP