ஆரோக்கியத்தை அதிகரிக்கச் செய்யும் நடைபயிற்சி நமது ஆயுட்கால நீட்டிப்புக்கும் உறுதுணையாக உள்ளதாக சமீபத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக, அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் 50-79 வயதுக்குட்பட்ட சுமார் 3 ஆயிரம் பேரின் உடல்களில் கண்காணிப்பு உபகரணங்கள் பொருத்தப்பட்டன. உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சி தொடர்பான அவர்களின் செயல்பாடுகள் அமெரிக்காவில் உள்ள தேசிய நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தில் பதிவாகி வந்தன.
பின்னர், எட்டாண்டுகள் கழித்து அவர்களில் எத்தனைபேர் உயிருடன் உள்ளனர்? என்று ஆய்வு நடத்தியதில் அதிகமாக நடைபயிற்சி மேற்கொள்ளாத சிலர் மட்டுமே உயிரிழந்துள்ளதாகவும், நடைபயிற்சியை தொடர்ந்து மேற்கொண்ட பலர் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வு முடிவுகளை வைத்துப் பார்க்கும்போது, அன்றாடம் பத்து நிமிடங்களுக்கு கை,கால்களை வேகமாக அசைத்து மிதமான நடைபயிற்சி மேற்கொள்வதன் மூலம் அதிக காலம் உயிர் வாழலாம் என தெரியவந்துள்ளது. மேலும், வேலை ஏதுமின்றி சோம்பி உட்கார்ந்திருப்பவர்கள் தரையை சுத்தம் செய்வது, குதிப்பது, நடப்பது, தோட்டவேலை செய்வது, ஓவியம் வரைவது போன்ற ஏதாவது ஒரு செயல்பாட்டில் ஈடுபட்டிருப்பது நல்லது எனவும் அறிவுரைக்கப்பட்டுள்ளது.
மிகக்கடினமான உடற்பயிற்சிகள் செய்வதன் மூலம் கிடைக்கும் உடல்நலம் சார்ந்த பலன்களைவிட இதைப்போன்ற மிதமான நடைபயிற்சியின் மூலமாக கிடைக்கும் பலன்கள் அதிகமானவை, நிரந்தரமானவையும்கூட என இந்த ஆய்வின் முடிவு குறிப்பிடுகிறது.
This comment has been removed by the author.
ReplyDelete