Loading...
Friday, 4 March 2016

முட்டைக்கோஸ் சாதம் செய்வது எப்படி..!!


தேவையான பொருட்கள்: 

துருவிய முட்டைகோஸ் - ஒரு கப், 

வடித்த சாதம் - ஒரு கப், 

கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், 

பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன் (ஊறவைக்கவும்), 

மிளகு - சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், 

வறுத்த வேர்க்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன், 

இஞ்சி (மிகவும் பொடியாக நறுக்கியது) - ஒரு டேபிள்ஸ்பூன், 

பட்டை - சிறிய துண்டு, 

கொத்தமல்லித்தழை - சிறிதளவு, 

எண்ணெய் - ஒரு டீஸ்பூன், 

உப்பு - தேவைக்கேற்ப.

தாளிக்க: 

கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், 

கறிவேப்பிலை - சிறிதளவு, 

காய்ந்த மிளகாய் - 2, 

எண்ணெய் - சிறிதளவு.

செய்முறை: 

* வடித்த சாதம், சூடாக இருக்கும் போதே ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றிக் கலந்தால் பொலபொலவென்று உதிர்ந்துவிடும். 

* கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்து... பட்டை, மிளகு - சீரகத்தூள், கடலைப்பருப்பு, உப்பு, வேர்க்கடலை போட்டுக் கிளறி, ஊறவைத்த பாசிப்பருப்பு, நறுக்கிய இஞ்சி சேர்த்து மேலும் கிளறவும். 

* இதில் துருவிய முட்டைகோஸ் சேர்த்து வதக்கி, சிறிது நீர் தெளித்துப் புரட்டி வேகவிட்டு இறக்கவும். 

* இந்த முட்டைகோஸ் மசாலாவை வெந்த சாதத்தில் போட்டுப் புரட்டி, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

* சுவையான சத்தான முட்டைகோஸ் சாதம் ரெடி.

0 கருத்துகள்:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...

 
TOP