தேவையான பொருட்கள்:
சிகப்பு அவல் - ஒரு கப்,
நாட்டு சர்க்கரை,
தேங்காய் துருவல் - தலா கால் கப்,
நெய், பூசணி விதை, ஏலக்காய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன்.
செய்முறை:
* அவலை நீரில் நன்றாக அலசி வடித்து, உப்பு நீர் தெளித்து பிசறி 10 நிமிடங்கள் வைக்கவும்.
* இதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
* துளி நெய்யில் ஏலக்காய்த்தூள், பூசணி விதை வறுத்து போட்டு, நாட்டு சர்க்கரை தூவிக் கிளறி பரிமாறவும்.
பலன்கள்: அவலில் இரும்புச் சத்து மிக அதிகம். மேலும் இதில் வைட்டமின்கள், தாது உப்புக்கள் மற்றும் நுண்ணூட்டச் சத்துக்கள் நிறைந்து இருப்பதால், உடலுக்கு நல்ல வளர்ச்சி தரும். எளிதில் செரிமானமாகும். உடல் வலுப்பெறும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.
சிவப்பு அவல் நன்மைகள் | Sigappu Aval Benefits in Tamil
ReplyDelete