தேவையான பொருள்கள்:
மட்டன் - 1/2 கிலோ
பல்லாரி - 10
தக்காளி - 3 (பெரியது)
புதினா இலை - 1 கப்
பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி
சீரகம் - 2 தேக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - தேவைக்கு
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1
மேஜைகரண்டி
தயிர் - 2 மேஜைகரண்டி
தனி வத்தல் தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மல்லி தூள் - 2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
லெமன் ஜூஸ் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
மல்லி இலை - சிறிதளவு
செய்முறை:
பெருஞ்சீரகம், சீரகம் மற்றும் மிளகு இவற்றை கொறுகொறுப்பாக பௌடர் ஆக்கிக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பின் இஞ்சி பூண்டு பேஸ்ட்டு சேர்த்து நன்கு வதக்கவும். தக்காளி சேர்த்து எண்ணெய் நன்கு பிரிந்து வரும் அளவிற்கு வதக்கவும்.
பின் மட்டன், 2 மே.கரண்டி தயிர், தனி வத்தல் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள், உப்பு, புதினா இலை மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு மூடி 4 விசில் போட்டு பின் 2 அல்லது 3 நிமிடங்கள் சிம்மில் வைத்து அடுப்பை அணைக்கவும்.
ஃபிரை பேனில் 3 மேஜைகரண்டி எண்ணெய் ஊற்றி வேக வைத்ததை அதில் சேர்த்து தண்ணீரை நன்கு வற்ற வைக்கவும்.
பின் பௌடர் செய்து வைத்ததை இதில் சேர்த்து கிளரவும். கரம் மசாலா மற்றும் லெமன் ஜூஸ் சேர்த்து கிளரி மல்லி இலை தூவி இறக்கவும்.
சுவையான மட்டன் சுக்கா தயார். நாண் மற்றும் பரோட்டாவுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.
டிப்ஸ் தேவைக்கு தகுந்தவாறு தண்ணீரை வற்ற வைத்துக் கொள்ளவும்.
aiyyo super
ReplyDelete