Loading...
Wednesday, 23 March 2016

சில எளிதான அழகு குறிப்புகள்..!!

தக்காளி சாறு அரை ஸ்பூன், தேன் அரை ஸ்பூன் சமையல் சோடா ஒரு சிட்டிகை, மூன்றையும் கலந்து கழுத்தில் போட்டு வர கருவளையம் சிறிது நாளில் மறைந்துவிடும்.

* முகம் மற்றும் மேனி அழகிற்கு கடலை பருப்பு கால் கிலோ, பாசி பயறு கால் கிலோ, ஆவாரம் பூ காய வைத்தது 100 கிராம் என மூன்றையும் அரைத்து சோப்புக்கு பதிலாக பயன்படுத்தினால் பயன் கிடைக்கும்.

* முகப்பரு தழும்பு மாற புதினா சாறு 2 ஸ்பூன், எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன், பயத்தம் பருப்பு மாவு இவற்றை கலந்து போட்டால் தழும்பு மாறும்.

* பாலை காய்ச்சும் போது அதிலிருந்து வரும் ஆவியில் முகத்தை காட்டி அந்த வியர்வையை துடைக்காமல் காயவிட்டு, அரை மணி நேரம் கழித்து முகம் கழுவினால் முகம் பளபளப்பாகும்.

* பெண்கள் கஸ்தூரி மஞ்சள், பூலாங்கிழங்கு ஆகிய இரண்டையும் அரைத்து முகத்தில் பூச முகம் பளபளப்பாக இருக்கும்.

* உருளைகிழங்கு சாறுடன் கடலை மாவையும் சேர்த்து முகத்தில் தேய்த்து வந்தாலும் முகம் பொலிவு பெறும்.

* 3 ஆப்பிள் துண்டுகள், 3 கேரட் துண்டுகள் இவற்றை துருவி ஜூஸ் செய்து, இதனுடன் அரை மூடி எலுமிச்சை சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கன்னத்தில் சதை போட்டு கன்னத்தின் நிறம் பளபளக்கும்.

0 கருத்துகள்:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...

 
TOP