தேவையானவை :-
பெரிய பருத்த மரவள்ளிக் கிழங்கு - 1
உப்பு - தேவையான அளவு
மிளகாய்த் தூள் - தேவையான அளவு
கறிவேப்பிலை - 1 ஆர்க்கு
எண்ணெய் - பொரிப்பதற்கு
எப்படிச் செய்வது?
மரவள்ளிக் கிழங்கைக் கழுவவும். கடினமான மேல்புறத் தோலைச் சீவி நீக்கவும். உருளைக்கிழங்கின் தோலைக் காட்டிலும் சற்று கடினமான தோலாக இருக்கும்.
கொஞ்சம் பொறுமையாகச் செய்தால் எளிதில் சீவி விடலாம். தோலை முழுமையாகச் சீவி நீக்கிய பின், வட்ட வடிவங்களாக அல்லது சிறிய குச்சிகள் போல கிழங்கை உங்களுக்குப் பிடித்த வடிவில் மெல்லியதாகச் சீவவும்.
(ஸ்லைசர் அல்லது கத்தி வைத்து சீவிக் கொள்ளவும்.)இந்த சிப்ஸைப் பொறுத்தவரையில் மெல்லியதாகச் சீவுவதும், பொரித்தெடுப்பதும் தான் வேலை. மற்றபடி மிகவும் சுலபம் தான். ஸ்லைசர் வைத்து கிழங்கை மெல்லிய வட்டங்களாகச் சீவி முடித்த பின் அகலமான வாணலியில் பொரிப்பதற்குத் தேவையான அளவு எண்ணெயை ஊற்றிச் சூடாக்கவும்.
எண்ணெய் சூடானதும் மிதமான தீயில் வைத்துக் கொண்டு, கொஞ்சம் – கொஞ்சமாக நறுக்கிய வட்டங்களை/ குச்சிகளைப் போட்டுப் பொரித்து எடுக்கவும்.
நல்ல பொன்னிறமாகப் பொரிந்த பின் எண்ணெயில் இருந்து அரித்து எடுத்து தட்டில் போடவும்.
சிப்ஸ் சூடாக இருக்கும் போதே அதனுடன் தேவையான அளவு உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாகக் குலுக்கி விடவும்.
(உப்பு, காரம் சிப்ஸில் சீராகப் பிடித்துக் கொள்ளும்.) கடைசியாகச் சிறிது கறிவேப்பிலையை எண்ணெயில் பொரித்து சிப்ஸுடன் சேர்த்து விடவும். சிப்ஸைக் காற்றுப்புகாத டப்பாக்களில் வைத்திருந்து பயன்படுத்தவும்.
0 கருத்துகள்:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...