Loading...
Friday, 25 March 2016

பெண்களின் மென்மையான சருமத்திற்கு இயற்கையான வழிகள்...!!

மென்மையான சருமமானது பொதுவாக ஆண்களை விட பெண்களுக்கே இருக்கும். இயற்கை முறையில் கிடைக்கும் பொருட்களை வைத்து முகத்தை அழகுபடுத்துவதே சிறந்ததாகவும், எந்த ஒரு பக்க விளைவும் முகத்திற்கு வராமல் தடுக்கவும் உதவும்.

கற்றாழையில் இருக்கும் ஜெல் பகுதி சருமத்திற்கு மென்மையையும், பொலிவையும் தரும் குணமுடையது.

கற்றாழையில் உள்ள ஜெல்லை முகத்திற்கு தினமும் தேய்த்து 5 முதல் 10 நிமிடம் ஊற வைத்து கழுவினால் முகமானது மென்மையை அடையும்.

மேலும் இது முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளையும் நீக்கும். லாவெண்டரை எடுத்து அரைத்து, அத்துடன் ஏதேனும் ஆலிவ் அல்லது பாதம் எண்ணெயை சேர்த்து முகத்தில் தடவி கழுவ வேண்டும்.

இதனை இரண்டு வாரத்திற்கு ஒரு முறை செய்ய வேண்டும். லாவெண்டர் ஆனது அனைத்து சருமத்திற்கும் பொருந்தாது. ஆகவே இதனை செய்யும் முன், அந்த கலவையை சிறு பகுதியில் தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

அவ்வாறு செய்யும் போது அந்த இடத்தில் சிவப்பு நிறம் அல்லது புண் என்று எதுவும் நேராமல் இருந்தால் முகத்திற்கு பின் தடவலாம்.

0 கருத்துகள்:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...

 
TOP